OUR CLIENTS
தெண்டுல்கரை முந்தினார் ரோகித்சர்மா இந்த ஆண்டில் 45 சிக்சர்
தெண்டுல்கரை முந்தினார் ரோகித்சர்மா இந்த ஆண்டில் 45 சிக்சர் Posted on 15-Dec-2017 தெண்டுல்கரை முந்தினார் ரோகித்சர்மா இந்த ஆண்டில் 45 சிக்சர்

புதுடெல்லி, டிச. 15-
ரோகித்சர்மா நேற்று 12 சிக்சர் 
அடித்தார்.இதன்மூலம் இந்த ஆண்டில் அவர் 45 சிக்சர்களை (20 ஆட்டம்) தொட்டார். இதனால் ஒரு ஆண்டில் அதிக சிக்சர் அடித்த இந்தியர் 
என்ற சாதனையை படைத்தார். 

அவர் தெண்டுல்கரை முந்தினார். தெண்டுல்கர் 1998-ம் ஆண்டில் 40 சிக்சர்கள் (33 போட்டி) அடித்தார்.ஒரு 
ஆண்டில் அதிக சிக்சர் எடுத்த 
சர்வதேச வீரர்களில் ரோகித்சர்மா 3-வது இடத்தை பிடித்தார். டிவில்லியர்ஸ் (தென்ஆப்பிரிக்கா) 2015-ம் 
ஆண்டில் 58 சிக்சர்களும் (18 போட்டி), அப்ரிடி (பாகிஸ்தான்) 2002-ம் 
ஆண்டில் 48 சிக்சர்களும் (36 போட்டி) விளாசி இருந்தனர். இலங்கைக்கு எதிராக இன்னும் ஒரே ஒரு 
ஒருநாள் போட்டி இருப்பதால் 
அப்ரிடியை ரோகித்சர்மா முந்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Label