OUR CLIENTS
அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி ஏடிஎஸ்பி உட்பட 4 பேர் மீது வழக்கு!
அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி ஏடிஎஸ்பி உட்பட 4 பேர் மீது வழக்கு! Posted on 15-Dec-2017 அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி ஏடிஎஸ்பி உட்பட 4 பேர் மீது வழக்கு!

திருச்சி, டிச.15-
 அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.31.5 லட்சம் மோசடி செய்ததாக பெரம்பலூர் ஏடிஎஸ்பி உட்பட 4 பேர் மீது வழக்குப் பதிவாகியுள்ளது.

புதுச்சேரி தேங்காய்திட்டு பகுதியைச் சேர்ந்த தனுஷ் மகன் பாலமுருகன்(34). இவரது மாமனார் சேகர்(59), திருச்சி சேதுராமன் பிள்ளை பகுதியில் வசிக்கிறார்.

இந்நிலையில், ‘தன் சகோதரி கல்பனாவுக்கு அரசு வேலை வாங்குவதற்காக மாமனார் சேகர், மாமியார் சிவகாமி(52), மனைவியின் சகோதரி தரணீஸ்வரி(25) ஆகியோர் வாயிலாக தற்போது பெரம்பலூர் மாவட்ட காவல்துறையில் ஏடிஎஸ்பியாக உள்ள ஞானசிவக்குமாரிடம் 2014ல் ரூ.35 லட்சம் கொடுத்தேன். வேலை வாங்கிக் கொடுக்கவில்லை என்பதால் பணத்தை திருப்பிக் கேட்டேன். ரூ.3.5 லட்சம் மட்டும் கொடுத்துவிட்டு மீதிப் பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி வருகிறார்’ என திருச்சி ஜே.எம். 2 நீதிமன்றத்தில் பாலமுருகன் மனுத்தாக்கல் செய்தார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துமாறு மாநகர காவல் ஆணையர் அலுவலகத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பேரில் ஏடிஎஸ்பி ஞானசிவக்குமார், சேகர், சிவகாமி, தரணீஸ்வரி ஆகிய 4 பேர் மீது திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Label