OUR CLIENTS
மாநகராட்சி துப்புரவு பணிக்கு துடைப்பம் இல்லாத அவலம் உபகரணங்கள் வழங்க வலியுறுத்தி பணியாளர்கள் போராட்டம்
மாநகராட்சி துப்புரவு பணிக்கு துடைப்பம் இல்லாத அவலம் உபகரணங்கள் வழங்க வலியுறுத்தி பணியாளர்கள் போராட்டம் Posted on 15-Dec-2017 மாநகராட்சி துப்புரவு பணிக்கு துடைப்பம் இல்லாத அவலம் உபகரணங்கள் வழங்க வலியுறுத்தி பணியாளர்கள் போராட்டம்

மதுரை, டிச.15-
மதுரை மாநகராட்சி துப்புரவு பணிக்கு தேவையான உபகரணங் களை வழங்க வேண்டும் என வலியுறுத்தி 
துப்புரவு பணியாளர்கள் போராட்டம் நடத்தினர். 

மதுரை முனிச்சாலையில் உள்ள மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தை துப்புரவு பணியாளர்கள் 
பலர் திடீர் முற்றுகையிட்டனர். அப்போது, மாநகராட்சி நிர்வாகம் துப்புரவு பணியாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.   குறிப்பாக, துப்புரவு பணிக்கு தேவையான உபகரணங்கள் வழங்க வேண்டும்,  மாவட்ட நிர்வாகம் வழங்கும் சம்பளத்தை தொழிலாளிகளுக்கு தர மறுக்கும்  ஒப்பந்தகாரர்களின்  ஒப்பந்தத்தை  ரத்து செய்ய வேண்டும் போன்ற கோரிக்கை களை வலியுறுத்தினர்.

துப்புரவு பணியாளர்கள் மேம்பாட்டு தொழிற் சங்கத்தின் தலைவர் போஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட தலைவர் கதிரவன் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் 
மதுரை  மாநகராட்சி  துப்புரவு பணியாளர்கள் சுமார் 100க்கும் மேற்பட்டோர்  கலந்து கொண்டனர். 

Label