OUR CLIENTS
குஜராத், ஹிமாச்சலில் வெல்லப் போவது யார்?
குஜராத், ஹிமாச்சலில் வெல்லப் போவது யார்? Posted on 18-Dec-2017 குஜராத், ஹிமாச்சலில்  வெல்லப் போவது யார்?

காந்திநகர், டிச.18&
குஜராத், இமாசல பிரதேச சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது.
குஜராத் சட்டமன்றக்கு கடந்த 9 மற்றும் 14ஆம் தேதிகளில் இரு கட்டமாக வாக்குப்பதிவுகள் நடைபெற்றன.

இரண்டாம் கட்ட தேர்தலின் போது வத்காம், விராம்கம், தாஸ்க்ரொய், சாவ்லி ஆகிய நான்கு சட்டசபை தொகுதிகளுக்கு உள்பட்ட 6 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரம் கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தடைபட்டன. 

இதன் காரணமாக, மேற்கண்ட ஆறு வாக்குச்சாவடிகளில் நேற்று மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. இந்நிலையில், நேற்று காலை முதல் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

மறு வாக்குப்பதிவு நடக்கும் இடங்களில் துணை ராணுவப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  வாக்களித்த மக்கள் தங்கள் இரு விரல்களில் உள்ள வாக்கு மை அடையாளத்தை காட்டிச் சென்றனர். ஏற்கனவே வாக்களித்தபோது விரலில் வைத்த மையும், தற்போது வாக்களித்த போது மற்றொரு விரலிலும் மை வைத்த அடையாளத்தை காட்டினர்.

இமாச்சல பிரதேச மாநில முதலமைச்சர் வீரபத்திர சிங் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்துவருகிறது. இவரது பதவிக்காலம் ஜனவரி 7 ஆம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில் இமாசல பிரதேச சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு கடந்த நவம்பர் 9ஆம்தேதி  நடந்தது. 68 உறுப்பினர்கள் கொண்ட இமாசல பிரதேச சட்டமன்றத்தில் காங்கிரஸின் பலம் 36 ஆகவும், பாஜகவின் பலம் 27 ஆகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

குஜராத்தில் முதற்கட்ட தேர்தலில் 68 சதவீத வாக்குகளும், 2ஆம் கட்ட தேர்தலில் 68.7 சதவீத வாக்குகளும் பதிவானது. இந்த தேர்தலில் கடந்த 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கிடைத்த வாக்குப்பதிவு சதவீதத்தைவிட குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.  182 உறுப்பினர்கள் கொண்ட குஜராத் சட்டமன்றத்திற்கு கடந்த 9ஆம் தேதியும், 14ஆம் தேதியும் 2 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இங்கு 22 ஆண்டுகாலம் பாஜக ஆட்சி நடத்திவருகிறது. மோடி தொடர்ந்து 3 முறை முதல்வராக பதவி வகித்துள்ளார். இமாசலபிரதேசத்தில் 74 சதவீத வாக்குகள் பதிவானது.

குஜராத் மற்றும் இமாசல பிரதேச சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடந்துமுடிந்துள்ள நிலையில், இன்ற இரண்டு மாநிலங்களின் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. 18.12.2017 காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கப்படவுள்ளது. காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளுக்கும் இடையே வெற்றிக்காக கடும் போட்டி நிலவும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. தொடங்கிய சற்று நேரத்தில் முன்னணி நிலவரம் வெளியாகிறது. 

Label