OUR CLIENTS
ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபர் ஹமித் கர்சாயை பிரதமர் மோடி சந்தித்து ஆலோசனை!
ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபர் ஹமித் கர்சாயை பிரதமர் மோடி சந்தித்து ஆலோசனை! Posted on 18-Dec-2017 ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபர் ஹமித் கர்சாயை பிரதமர் மோடி சந்தித்து ஆலோசனை!

புதுடெல்லி, டிச.18-
பிரதமர் மோடி ஆப்கன் முன்னாள் அதிபர் ஹமித் கர்சாயை டெல்லியில் நேற்று சந்தித்தார். அப்போது இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதுதொடர்பாக பிரதமர் மோடி ட்விட்டரில்  எனது நண்பர் ஹமித் கர்சாயை டெல்லியில் சந்தித்து பேசியதில் மகிழ்ச்சி அடைந்துள்ளேன் என பதிவிட்டுள்ளார். அத்துடன், ஹமித் கர்சாயுடன் இரவு விருந்தில் பங்கேற்றதையும் பதிவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், பிரதமர் மோடி மற்றும் ஆப்கன் முன்னாள் அதிபர் ஹமித் கர்சாயுடனான இந்த சந்திப்பில் இருநாட்டு உறவுகளை மேம்படுத்துவது குறித்தும், பாதுகாப்பு துறைகளில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது என கூறியுள்ளனர்.

Label