OUR CLIENTS
பெண்களிடம் தொடரும் அத்துமீறல்!
பெண்களிடம் தொடரும் அத்துமீறல்! Posted on 18-Dec-2017 பெண்களிடம் தொடரும் அத்துமீறல்!

புதுடெல்லி, டிச.18-
வேலை செய்யும் இடத்தில் பெண்களிடம் மேற்கொள்ளப்படும் அத்துமீறல் தொடர்பாக சராசரியாக ஒரு நாளைக்கு இரண்டு புகார்கள் வருவதாக தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது. 

கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் டிசம்பர் 12ம் தேதி வரையிலான காலகட்டத்தில், அலுவலகத்தில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் அத்துமீறல்கள் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையத்துக்கு 539 புகார்கள் வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, சராசரியாக ஒரு நாளைக்கு 1.8 புகார். அதிகபட்சமாக உத்தரபிரதேசம், டெல்லி, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ஹரியானா ஆகிய மாநிலங்களில் இருந்துதான் புகார்கள் வந்துள்ளன. மொத்த புகார்களில் 60 சதவிகிதம் இந்த மாநிலங்களில் இருந்து வந்துள்ளன. 

பெண்கள் பாதுகாப்புக்கு என்னதான் கடுமையான சட்டங்கள் போட்டாலும் பாலியல் அத்துமீறல்கள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. பெண்கள் மத்தியில் கூடப் போதுமான விழிப்புஉணர்வு இன்மை காரணமாக இதுபோன்ற அத்துமீறல்கள் தொடர்கிறது. வெளியே சொல்ல தயங்கியபடி பலரும் வேலைபார்த்து வருகின்றனர். அவர்கள் எல்லாம் புகார் தெரிவிக்க ஆரம்பித்தால், புகார்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும். 

பெண்களுக்கு எதிரான வன்முறைகள், பாலியல் அத்துமீறல்களை விசாரிக்க ஒவ்வொரு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களிலும் குழு அமைக்கப்பட வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. இந்தக் குழுவுக்கு வரும் புகார் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், 10-ல் 8 நிறுவனங்கள் இந்தக் குழுக்களை அமைக்காமலேயே உள்ளன. இதனால், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் வெளியே தெரிவதில்லை. சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க முடிவதில்லை என்கின்றனர் பெண்கள் நல அமைப்பினர்.

Label