OUR CLIENTS
நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா
நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா Posted on 18-Dec-2017 நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில்  அனுமன் ஜெயந்தி விழா

நாமக்கல், டிச.18-
அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நாமக்கல்லில் ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்துக்கு எட்டு வடை மாலைகள் சார்த்தப்பட்டன. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று நீண்ட வரிசையில் நின்று அனுமனை பக்திப்பெருக்குடன் வழிபட்டனர். முன்னதாக, அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.  சுமார் 2ஆயிரத்து 250 கிலோ உளுந்தம் பருப்பு மாவு,600 கிலோ நல்லெண்ணெய்,36 கிலோ மிளகு,36 கிலோ சீரகம்,135 கிலோ உப்பு ஆகியவற்றைக் கொண்டு வடைகள் தயாரித்து, மாலைகளாக கோர்க்கப்பட்டு அணிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Label