OUR CLIENTS
விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாக்கப்படும் &ஜெட்லி உறுதி
விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாக்கப்படும் &ஜெட்லி உறுதி Posted on 18-Dec-2017 விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாக்கப்படும் &ஜெட்லி உறுதி

புதுடெல்லி, டிச.18-
தலைநகர் டில்லியில்  நபார்டு வங்கி சார்பில் நடந்த கருத்தரங்கில்  மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி பங்கேற்று பேசியதாவது: விவசாய துறை மற்றும் கிராம பொருளாதாரம் குறித்து அரசு மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது.

உலகம் முழுவதும் விவசாய சமூகத்தினர் பெருமைப்படக்கூடியவர்களாக உள்ளனர். இந்திய பொருளாதாரம் விவசாயிகளை சார்ந்துள்ளது. 2022ம் ஆண்டுக்குள்  விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க அரசு உறுதிபூண்டுள்ளது. இதற்கான வசதி, வாய்ப்புகள் உருவாக்கப்படும்.வளர்ந்த நாடுகள், மானியத்தை விவசாயிகளுக்கு நேரடியாக வழங்கி வருகிறது. பயிர் கருகும் சூழ்நிலையில், விவசாயிகளை காப்பீடு பாதுகாக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

இதில் பங்கேற்று பேசிய நிதி சேவை செயலாளர் ராஜிவ்குமார் பேசும்போது, விவசாயிகளுக்கு கடன் வழங்குவதை அதிகரிக்க வங்கிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்றார்

Label