OUR CLIENTS
குட்டி கரணம் போட்டாலும் இந்த தேர்தலில் இருவரும் டெபாசிட் வாங்க முடியாது: மு.க.ஸ்டாலின் சவாலான பேட்டி!
குட்டி கரணம் போட்டாலும் இந்த தேர்தலில் இருவரும் டெபாசிட் வாங்க முடியாது: மு.க.ஸ்டாலின் சவாலான பேட்டி! Posted on 18-Dec-2017 குட்டி கரணம் போட்டாலும் இந்த தேர்தலில் இருவரும் டெபாசிட் வாங்க முடியாது: மு.க.ஸ்டாலின் சவாலான பேட்டி!

சென்னை, டிச.18-
ஆளுங்கட்சியோ, தினகரனோ குட்டி கரணம் போட்டாலும் இந்த தேர்தலில் டெபாசிட்  வாங்க முடியாது.  

சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் ஸ்டாலின் கூறியதாவது:    ஆர்.கே. நகர் இடைதேர்தலில் அதிமுகவை சேர்ந்த 2 அணிகளும் டெபாசிட்டை வாங்க முடியாது என்பற்காக வாக்காளர்களுக்கு பணத்தை கொடுத்து வெற்றி பெறும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது ஜனநாயகத்துக்கு விரோதமானது.

ஏற்கனவே இந்த தேர்தல் ஏன் நின்றது. விஜயபாஸ்கர் வீட்டில் 89 கோடி ரூபாய் வைத்திருந்ததுக்கான ஆவணங்கள் சோதனையின் போது சிக்கியது. இப்போது முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி மூலம் பணம் பட்டுவடா செய்யப்பட்டது. இதை காரணம் காட்டிதான் கடந்த முறை தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததுக்கு தகுந்த நடவடிக்கை எடுத்து இருந்தால், இந்த நிலை ஏற்பட்டு இருக்காது. தேர்தலை நிறுத்த முயற்சி செய்து கொண்டு உள்ளனர். ஆளுங்கட்சியோ, தினகரனோ குட்டி கரணம் போட்டாலும் இந்த தேர்தலில் டெபாசிட்  வாங்க முடியாது.    இவ்வாறு அவர் கூறினார்.

Label