ஆசிரியர்களுக்கு ரூ.18,000 ஊதியம் நிர்ணயிக்க வேண்டும்: ஜாக்டோ&ஜியோ உண்ணாவிரதம் Posted on 18-Dec-2017
பெரம்பலூர், டிச.18-
தமிழக அரசு ஆசிரியர்களுக்கு குறைந்த பட்ச ஊதியமாக 18 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்க வேண்டும் என வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியது.
பெரம்பலூரில் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதில், அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு நடைமுறைபடுத்தப்படும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தினை அறவே ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்த வேண்டும்.
6வது ஊதியக்குழுவில் ஊதிய பாதிப்புக்குள்ளான இடைநிலை ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள், அமைச்சுப் பணியாளர்கள், அலுவலக உதவியாளர்கள், உயர்நிலை மேனிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள், தலைமைச் செயலக உதவிப்பிரிவு அலுவலர்கள் என பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். மத்திய அரசு அலுவலர்களுக்கு குறைந்த பட்ச ஊதியமாக 18 ஆயிரம் ரூபாயை அறிவித்ததுபோல், தமிழக அரசு அலுவலர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியம் 15ஆயிரத்து 700 ரூபாய் என்பதை மாற்றி, 18000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.