OUR CLIENTS
பிரதமர் மோடி பாணியில் பிரசாரம் செய்த ஓபிஎஸ்
பிரதமர் மோடி பாணியில் பிரசாரம் செய்த ஓபிஎஸ் Posted on 18-Dec-2017 பிரதமர் மோடி பாணியில் பிரசாரம் செய்த ஓபிஎஸ்

சென்னை, டிச.18-
பிரதமர் மோடி பாணியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிமுக சார்பாக தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.

இடைத்தேர்தல் நடக்கவிருக்கும் ஆர்கே நகரில் பல்வேறு கட்சிக்காரர்களும் பிரசாரம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் அதிமுக கட்சியின் வேட்பாளரான மதுசூதனனுக்கு ஓ.பன்னீர்செல்வம் வாக்கு சேகரித்தார். அதில் திமுக செயல்தலைவர்  ஸ்டாலின் குறித்து பேசிய அவர், ஸ்டாலின் சுற்றுப்பயணத்தின்போது டீ கடையில் டீ குடித்தார். ஆனால் நான் டீ கடை நடத்தி வருகிறேன்" என்றார்.

பிரதமர் மோடி குஜராத் சட்ட மன்றத்திற்கான தேர்தல் பிரசாரத்தில் நான் டீ விற்றேன், ஆனால் காங்கிரஸ் மாதிரி நாட்டை விற்கிற ஆள் இல்லை என கூறினார். அதைப்போலவே ஓ.பன்னீர்செல்வமும்  டீ கடை சென்டிமென்ட் மூலம் வாக்கு கேட்டு வருகிறார்.

Label