OUR CLIENTS
அயப்பாக்கத்தில் திறக்கப்படாத மகளிர் சுய உதவி குழு கட்டடம்!
அயப்பாக்கத்தில் திறக்கப்படாத மகளிர் சுய உதவி குழு கட்டடம்! Posted on 18-Dec-2017 அயப்பாக்கத்தில் திறக்கப்படாத  மகளிர் சுய உதவி குழு கட்டடம்!

பூவிருந்தவல்லி, டிச.18- 
திருவள்ளூர் மாவட்டம், அம்பத்தூர் அடுத்த அயப்பாக்கத்தில் 2015&ல் கட்டி முடிக்கப்பட்டுள்ள மகளிர் சுய உதவி குழு கட்டடம் இதுநாள் வரை திறக்கப்படாத நிலையில் உள்ளது.

இதனால் இங்குள்ள மகளிர் அமர்ந்து பேச இடமில்லாமல் அவதிப்படுகின்றனர். அரசு லட்சக்கணக்கில் செலவு செய்து கட்டிய கட்டடத்தை உடனடியாக திறந்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.

மகளிருக்கு பயனுள்ளதாக அமையும் வகையில் இந்த கட்டடத்தை விரைவில் திறக்க வேண்டும் என்று சமுக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். விரைவில் இந்த கட்டடம் திறக்கப்படுமா? மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுமா? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Label