OUR CLIENTS
வேலூரில் நடைபாதை ஆக்கிரமிப்பு சென்னை சில்க்ஸ் அத்துமீறல்!
வேலூரில் நடைபாதை ஆக்கிரமிப்பு சென்னை சில்க்ஸ் அத்துமீறல்! Posted on 18-Dec-2017 வேலூரில் நடைபாதை ஆக்கிரமிப்பு சென்னை சில்க்ஸ் அத்துமீறல்!

வேலூர், டிச.18-
வேலு£ர் மாநகரில் பல இடங்களில் தனியார் நிறுவனங்கள், தங்கள் நிறுவனத்தின் அருகே இருக்கும் அரசுக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்து கொண்டு வருகின்றன. ஆனால் அரசு அலுவலர்கள்  யாரும் இதை கண்டும் காணாமல் இருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. 

வேலு£ரில் சென்னை&பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சர்வீஸ் ரோட்டில் அமைந்துள்ளது தி சென்னை சில்க்ஸ் நிறுவனம். இதற்கு பக்கத்திலேயே குமரன் தங்க மாளிகை என்ற நகை கடையும் இயங்குகிறது. குறிப்பாக பொங்கல், தீபாவளி மற்றும் கிறிஸ்துமஸ், ரமலான் போன்ற பண்டிகை காலங்களில் இந்த கடையில் தங்கம், வெள்ளி, பிளாட்டினம் மற்றும் புது துணி ரகங்களை வாங்க பொதுமக்கள் அதிகமாக வந்து செல்கின்றனர். மேலும் இந்தபகுதியில் வாகன போக்குவரத்து நெரிசல் அதிகமாக ஏற்படுகிறது. 

இந்நிலையில் தி சென்னை சில்க்ஸ் நிறுவனத்தினர், தங்கள் கட்டடத்தின் அருகேயுள்ள அரசுக்குச் சொந்தமான இடம் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் நடைபாதையை கூட விட்டுவைக்காமல் அத்துமீறி ஆக்கிரமித்து வைத்துள்ளனர். அந்த இடத்தில் ஸ்டைலிஷ் கற்களை பதித்து ஏதோ இவர்கள் விலைக்கு வாங்கிய பட்டா இடம் போல மாற்றி வைத்து மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர். எந்த அரசுத்துறையை கேட்டாலும் யாரும் இந்த இடத்தை நாங்கள் தி சென்னை சில்க்ஸ் நிறுவனத்துக்கு விற்பனை செய்யவும் இல்லை. தாரை வார்க்கவும் இல்லை என்று நச்சென்று பதில் அளிக்கின்றனர். ஆனால் இந்த ஆக்கிரமிப்பை அகற்ற எந்த துறையும் இதுநாள் வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் இந்நிறுவனத்தின் அருகே  மாநகராட்சி நிர்வாகம் நீண்ட து£ரத்துக்கு பொதுமக்கள் நடந்து செல்லும் வகையில் நடைபாதை-யில் சிமெண்ட் சிலாப்புகள் அமைத்துள்ளது.  

இந்த நடைபாதையில் அமைக்கப்பட்டுள்ள சிமெண்ட் சிலாப்புகள் மீது தி சென்னை சில்க்ஸ் நிறுவனத்தினர் -----இரும்பு தகடு பொருத்திய விளம்பர ஸ்டாண்ட் வைத்துள்ளனர். இதை பொருத்த அங்கு கொத்தி சேதம் ஏற்படுத்தியுள்ளனர். இதனால் பொதுமக்கள் நடந்து செல்வதற்காக நடைபாதையில் போடப்பட்ட சிமெண்ட் சிலாப்புகள் விரிசல் விட்டும், உடைந்தும் காணப்படுகின்றன. அப்படி உடைந்த சிலாப்புகள் அதே கால்வாயில் விழுந்தும் மேலும் ஏற்கனவே போடப்பட்ட சிமெண்ட் சிலாப்புகளின் ஓரம் ஆங்காங்கே சேதமாகி உள்ளது. கானாற்றுக்கு மழைநீர் செல்லும் பாதை அடைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுபோன்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் படையெடுப்பால் மாநகரின் நீர் வளம் இயற்கை வளம் சுரண்டப்பட்டுள்ளது. இதற்கு தி சென்னை சில்க்ஸ் நிறுவனம் பதிலளிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், மாநகர பொதுமக்களும் கருத்து தெரிவித்துள்ளனர். குறிப்பாக கால்வாயில் உள்ள கழிவு நீரால், துர்நாற்றம் வீசுகிறது. இந்த பகுதியை கடந்து செல்லவே முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மூக்கை பிடித்து கொண்டு இந்த இடத்தை கடந்து செல்ல வேண்டிய கட்டாய நிலை மாநரக மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற அசௌகரிய நிலைக்கு தி சென்னை சிலக்ஸ் நிறுவனம் பொதுமக்களை தள்ளி விட்டுள்ளது கண்டனத்துக்குரியதாகும். குறிப்பாக  இரவில்  பொதுமக்கள் நடந்து செல்லும்போது கால் தவறி கால்வாயில் விழுந்து அடிபடும் அபாய நிலை நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் அந்தபக்கம் நடந்து செல்லவே அச்சப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சிலாப்புகள் உடைந்துள்ள இடத்தில் மக்கள்  கீழே இறங்கி நெடுஞ்சாலையில் நடந்து சென்றால், சீறிவரும் வாகனங்களினால் விபத்துக்கள் ஏற்படுமோ எனவும் அஞ்சுகின்றனர்.

மேலும் அந்நிறுவனத்தின் அருகே உள்ள நடைபாதை இடத்தை பார்க்கிங் பாயின்ட்டாகவுகம் தி சென்னை சில்க்ஸ் நிறுவனத்தினர் மாற்றி பெயர் வைத்துக் கொண்டு ஹாயாக பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த சென்னை சில்க்ஸ் நிறுவனத்துக்கு துணி எடுக்க பொதுமக்கள் ஆட்டோக்களில் வர வேண்டியுள்ளது. இதனால் அடிக்கடி இந்த பகுதி ஆட்டோ ஸ்டாண்டாகவும் மாறி விடுகிறது. மேலும் கார்களும் இந்த பகுதியில் நிறுத்தப்படுகின்றன. இதனால் அந்த சிமெண்ட் சிலாப்புகள் உடைய காரணமாக அமைந்து விடுகிறது.

அப்படி நடைபாதையில் போடப்பட்ட சிமெண்ட் சிலாப்புகள் அதிக பாரம் தாங்காமல் ஆங்காங்கே உடைந்து காணப்படுகிறது.  உடைந்த சிமெண்ட் சிலாப்புகளை சரி செய்ய மாநகராட்சி நிர்வாகம் ஒரு முறை பணம் செலவு செய்யலாம்.  ஆனால் பல முறை செலவு செய்தால், மக்கள் வரிப்பணம் வீணாக்கப்படுவதாகத்தானே அர்த்தம். எனவே உடைந்த சிமெண்ட் சிலாப்புக்காக தி சென்னை சில்க்ஸ் நிறுவனத்திடமே மாநகராட்சி நிர்வாகம் பணம் வசூல் செய்யவேண்டும். எதற்கெடுத்தாலும் வரி போட்டு பொதுமக்களிடம் இருந்து வசூல் செய்யும் மாநகராட்சி அலுவலர்கள், உடைந்த சிலாப்புகளுக்காக ஏன் தி சென்னை சில்க்ஸ் நிறுவனத்தாரிடமே வசூல் செய்யக் கூடாது. 

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வேலு£ரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்ட வெளிமாநிலத்தைச் சேர்ந்த சிறுமி லாங்கு பஜாரில் பொதுமக்கள் நடந்து செல்வதற்காக போடப்பட்ட பாதாள சாக்கடை நடைபாதையில் உள்ள சிமெண்ட சிலாப்புகள் அருகே நடந்து சென்றார். அப்போது உடைந்திருந்த சிமெண்ட் சிலாப்புகளை கவனிக்காததால் கனமழை பெய்து வெள்ளம் பெருக்கெடுத்து தெருவில் ஓடியது. அப்போது அதில் அந்த 10 வயது சிறுமி கால் தவறி திடீரென கால்வாயில் விழுந்தார். இந்த தண்ணீர் தென்றல் நகர் வரை சென்றது. இதில் அந்த சிறுமியின் உடல் தென்றல் நகரில் கரை ஒதுங்கியது குறிப்பிடத்தக்கது. 

இதை கவனத்தில் கொண்டு தி சென்னை சில்க்ஸ் நிறுவனம் தனது கடையின் அருகே உள்ள நடைபாதை ஆக்கிரமிப்பை அகற்ற  வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இதேபோன்று அந்த சாலை முழுவதும் உள்ள நிறுவனங்கள், கடைகள் தங்கள் நிறுவனத்திற்கு முன் உள்ள நடைபாதையை ஆக்கிரமிப்பு செய்துள்ளதால், பொதுமக்கள் நடந்து செல்ல வழியின்றி தார் சாலையில் நடந்து செல்லவேண்டியதாக உள்ளது. சர்வீஸ் ரோடு எப்போதும் போக்குவரத்து நெரிசலோடு உள்ளதால் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். இதனால் பாதாள சாக்கடை சிலாப்புகள் மிகவும் பலமிழந்து உடையும் தருவாயில் உள்ளது. விபரீதம் நடைபெறும் முன் உடைந்த சிலாப்புகளை சரிசெய்ய வேண்டும். மேலும் சேதம் ஏற்படாமல், பொதுமக்கள் பயன்படுத்தும்விதமாக ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்கள் மற்றும் ஒட்டுமொத்த பொதுமக்களின் கோரிக்கையாகும். 

இந்த பிரச்னையை காலம் தாழ்த்தாமல் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே பொதுமக்களின் ஒட்டுமொத்த கோரிக்கையாக உள்ளது. பல்வேறு துறை அதிகாரிகள் இந்த வழியாகச் சென்றும் எந்த நடவடிக்கையும் இதுநாள் வரை ஏன் எடுக்கவில்லை என்பதுதான் வேடிக்கையாக உள்ளது. மாவட்ட ஆட்சியர் ராமன் தி சென்னை சில்க்ஸ் மீது அம்பு விடுவாரா? என்று பொதுமக்கள் ஆவலுடன் எதிர்நோக்கி காத்து கொண்டுள்ளனர். அவரது நடவடிக்கையை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Label