OUR CLIENTS
தீவிரம் அடையும் காட்டுத்தீ... கலிஃபோர்னியாவில் இருந்து வெளியேற உத்தரவு
தீவிரம் அடையும் காட்டுத்தீ... கலிஃபோர்னியாவில் இருந்து வெளியேற உத்தரவு Posted on 18-Dec-2017 தீவிரம் அடையும் காட்டுத்தீ...  கலிஃபோர்னியாவில் இருந்து வெளியேற உத்தரவு

கலிஃபோர்னியா, டிச.18-
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்பு காட்டுத்தீ ஏற்பட்டது. காட்டுத்தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு, மீட்புப் பணியினர் திணறிவருகின்றனர். காற்றின் வேகம் அதிகமாக உள்ளதால், தீ வேகமாக பரவி வருகிறது. இதனால், லட்சக் கணக்கான மக்கள் வீடுகளைவிட்டு வெளியேறி உள்ளனர். தீ மேலும் பரவிவருவதால் கலிஃபோர்னியாவின் வடமேற்கு பகுதியில் உள்ள மக்களை மொத்தமாக வெளியேறும்படி அரசு உத்தரவிட்டுள்ளது.

கலிஃபோர்னியா வரலாற்றில் மிகப்பெரிய காட்டுத்தீக்களின் மூன்றாவது இடத்தை இது பிடித்துள்ளது. தற்போது கலிஃபோர்னியா சான்டாபார்பரா பகுதியில் தீ பரவியுள்ளது. இந்த பகுதியில்தான் பிரபலங்களின் சொகுசு வீடுகள், நட்சத்திர விடுதிகள் அதிக அளவில் உள்ளன. தீ-க்கு எதுவும் மிஞ்சாது என்பதால் பொருட்சேதம் அதிக அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காற்றின் வேகம் மணிக்கு 65 மைல் என்ற அளவில் உள்ளதால், காட்டுத்தீயை கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளது. இது குறித்து கலிஃபோர்னியா வனம் மற்றும் தீ பாதுகாப்புத் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், "ஏற்றமான பகுதியில் தீ பரவி வருகிறது. காற்றின் வேகம் அதிகமாக இருக்கிறது. இந்த சூழலில் தீயை தடுத்து நிறுத்துவது முடியாத காரியமாக இருக்கிறது. தீ வேகமாக பரவும் சூழலில், தீயின் முன்னால் வீரர்களை நிறுத்துவது மிகவும் ஆபத்தானது. இருப்பினும் தொடர்ந்து தீயைக் கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, அந்த பகுதியில் இருந்து வெளியேறும் மக்கள், தீ கடந்து செல்ல இருக்கும் பாதையில் உள்ள வீடுகள், பள்ளிகள், தேவாலங்களின் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். அதேபோல், பாதுகாப்புப் பகுதியில் உள்ள பள்ளிகள், தேவாலங்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும் புகைப்படங்களும் வைரல் ஆகி வருகிறது.

Label