மசூதியை சேதப்படுத்தியவருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை Posted on 18-Dec-2017
நியூயார்க், டிச.18-
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் கடந்த ஆண்டு மசூதியை சேதப்படுத்தியதாக கைதான நபருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் கேப் கானாவெரால் பகுதியில் இஸ்லாமியர்கள் வழங்கமாக வழிபாடு நடத்தும் மசூதி ஒன்று உள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இந்த மசூதியின் ஜன்னல்கள் உடைக்கப்பட்டு, மின் விளக்குகள், கேமராக்கள் சேதப்படுத்தப்பட்டன.
இது தொடர்பாக மிச்சேல் வோல்பே என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் மீதான விசாரணை புளோரிடா மாகாண நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், கடந்த செவ்வாய் அன்று அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். கொடூர குற்ற பிரிவின் கீழ் தண்டிக்கப்பட்ட அவருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.