OUR CLIENTS
சிலியில் ஏற்பட்ட நிலச்சரிவால் கிராமமே அழிந்தது!
சிலியில் ஏற்பட்ட நிலச்சரிவால் கிராமமே அழிந்தது! Posted on 18-Dec-2017 சிலியில் ஏற்பட்ட நிலச்சரிவால் கிராமமே அழிந்தது!

சிலி, டிச.18-
 சிலி நாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் ஒரு கிராமமே அழிந்தது. இதில், 5 பேர் பலியாகினர். 15-க்கும் மேற்பட்டோர் நிலச்சரிவில் சிக்கியுள்ளனர். 

தெற்கு சிலியில் கடும் மழை பெய்து வருகிறது. 12 மணி நேரத்தில் 122 மி.மீ மழை பதிவாகியுள்ளது. கடும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பெருவெள்ளம், மழை காரணமாக நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இதில், வில்லா சான்டா லூசியா என்ற கிராமத்தில் 20-க்கும் மேற்பட்ட வீடுகள் சிக்கின. நிலச்சரிவு காரணமாக ஐந்து பேர் பலியாகினர். ஒரு போலீஸ் அதிகாரி உள்ளிட்ட ஏழு பேரை மீட்டுள்ளனர்.  இன்னும் 15-க்கும் மேற்பட்டவர்களைக் காணவில்லை. மழை தொடர்வதால் மீட்புப் பணிகளில் வேகமாக ஈடுபட முடியாமல் அதிகாரிகளும் பொது மக்களும் தவித்து வருகின்றனர். நிலச்சரிவில் சிக்கியோரைத் தேட இரண்டு ஹெலிகாப்டர்களை அந்நாட்டு அதிபர் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.

Label