OUR CLIENTS
மாயஜால உலகம் ‘ட்ரிக் ஐ ம்யூசியம்’
மாயஜால உலகம் ‘ட்ரிக் ஐ ம்யூசியம்’ Posted on 17-Dec-2017 மாயஜால உலகம் ‘ட்ரிக் ஐ ம்யூசியம்’

சிங்கப்பூர், டிச.17-

நீங்கள் சாதாரணமாக ஒரு புகைப்படத்தை எடுத்து, அதனை பல விதமான எடிட்டிங் செய்து, அதன் பிறகு தானே சோசியல் மீடியாவில் அப்டேட் செய்வீர்கள்? இனி, உங்களுக்கு எடிட்டிங் தொல்லை இருக்காது. கண்ணால் காண்பது பொய்! என்று நிரூபிக்கும் வகையில், சிங்கப்பூரில், ஒரு அருங்காட்சியகம் இருக்கிறது. ‘ட்ரிக் ஐ ம்யூசியம்’ எனப்படும் இந்த மியூசியம், உங்கள் கண்களை பொய்யாக்குகிறது.இந்த இடத்தில் வருபவர்களுக்கு, கண்கள் எல்லாம் மாயையாகத் தெரிவதோடு, பல வகையான அழகான புகைப்படங்களையும் எடுக்கலாம்.

இங்கு, மாஸ்டர் பீஸ்களின் உலகம்,  உற்சாகம், நிஜத்திற்கு அப்பற்பட்ட உலகம், ஃபேரி டேல், ஃபேண்டசி, . ட்ரிக் உலகம் என ஆறு வகையான இடங்கள் உறுவாக்கப்பட்டுள்ளன.

1. மாஸ்டர் பீஸ்களின் உலகம் (world of masterpieces)

                                  

உலகில் உள்ள அனைத்து வகையான சிறந்த விஷயங்களை, உருவாக்கி, அதில், நாம் இருப்பது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மாயா உலகில், நாம் தோற்றத்தை குறைத்தோ அதிகரித்தோ பல விந்தையான புகைப்படங்களை எடுக்கமுடியும்.

                                 

2. உற்சாகம் (Excitement)

                                 

குழந்தைப் பருவத்தில், நமக்கு சிலவற்றை செய்ய மிகவும் ஆசைப் பட்டிருப்போம். அந்த ஆசைகளை நிறைவு செய்யும் வகையில், யானை சவாரி, மூங்கில் மேலே ஏறுவது, பறப்பது போன்ற வடிவங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

                                 

3. நிஜத்திற்கு அப்பற்பட்ட உலகம் (Supernatural)

                                 

பூதங்கள், ஆவிகள், அழியும் உலகம், இறந்து விடுவது போன்ற நிலை, இப்படி கற்பனைக்கு எட்டாத பல விஷயங்கள், இங்கு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் நீங்கள் புகைபடங்கள் கண்டிப்பாக உங்களை மிரளவைக்கும் என்பது நிஜம்.

                                 

.4. ஃபேரி டேல் (Fairy Tale)

                                 

பல ஆங்கில அனிமேஷன் படங்களில் நாம் பார்த்த அதிசயமான பல கற்பனையான விஷயங்கள் இங்கு இருக்கும். அந்த ஃபேரி டேல் இடங்களில், நாம் இருந்தால் எப்படி இருக்கும்! இந்த கற்பனையை நிஜமாக்குகிறது ‘ட்ரிக் ஐ ம்யூசியத்தில் அமைத்துள்ள ஃபேரி டேல் இடம்.

                                 

5. ஃபேண்டசி (Fantasy)

                                  

பல ஃபேண்டசி கனவுகளின் ஒட்டுமொத்த தொகுப்பாக உள்ள இடம் தான் இந்த இடம். சில அதீத அழகான கற்பனைக் காட்சிகள் தத்துருபமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

                                   

6. ட்ரிக் உலகம் (Trick World)

போடோஷாப் செய்வது போல, பலருடன் இணைந்து அழகான படங்களை நாம் இங்கு எடுத்துக் கொள்ளலாம்.

                                  

இந்த உலகின், பல்வேறு ஊர்களின், அழகான இடங்கள் 3D முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால், நாம் அங்கேயே சென்று எடுத்தது போல படங்களை நாம் எடுத்துக் கொள்லலாம்.  இனி, போடோஷாப்பிற்கு வேலையில்லை! சிங்கப்பூரின் ட்ரிக் ஐ முயூசியம் அனைத்தையும் உங்கள் கையில் தந்து விடும்.

Label