OUR CLIENTS
மும்பை தீ விபத்தில் கடை ஊழியர்கள் 12 பேர் பலி!
மும்பை தீ விபத்தில் கடை ஊழியர்கள் 12 பேர் பலி! Posted on 18-Dec-2017 மும்பை தீ விபத்தில் கடை ஊழியர்கள் 12 பேர் பலி!

 மும்பை, டிச.18-
மும்பையில் கடை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் அக்கடையின் ஊழியர்கள் 12 பேர் பரிதாபமாக பலியாகினர்.

மும்பையின் சகி நாகா குர்லா பகுதியில் உள்ள கைரானி பகுதியில் உள்ள பானு ஃபர்சான் கடையில் அதிகாலை 4.25 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் அக்கடையில் பணிபுரிந்த நபர்கள் சிக்கிக் கொண்டனர். தகவல் கிடைத்ததும் அதிகாரிகள் வந்து அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்ந்தனர். எனினும் சிகிச்சைக்கு முன்பாகவே 12 பேரும் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

         
     

Label