OUR CLIENTS
இமாச்சல பிரதேசத்தில் புதிய முதல்வரை தேர்ந்தெடுப்பது பாஜகவிற்கு சவலாக தான் இருக்கும்!
இமாச்சல பிரதேசத்தில் புதிய முதல்வரை தேர்ந்தெடுப்பது பாஜகவிற்கு சவலாக தான் இருக்கும்! Posted on 18-Dec-2017 இமாச்சல பிரதேசத்தில் புதிய முதல்வரை தேர்ந்தெடுப்பது பாஜகவிற்கு சவலாக தான் இருக்கும்!

 சிம்லா, டிச.18
இமாச்சல பிரதேசத்தை பொறுத்தவரையில் 1990களுக்கு பிறகு, காங்கிரஸூம் பாஜகவும் மாறி மாறி ஆட்சியமைத்து வருகின்றன. 2012ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் அங்கு ஆட்சி அமைத்தது. முதல்வராக மூத்த தலைவர் வீர்பத்திர சிங் பதவியேற்றார். 

இமாச்சல பிரதேசத்தில் மொத்தமுள்ள 68 தொகுதிகளுக்கு கடந்த நவம்பர் மாதம் 9-ம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடந்தது. முதல்வர் வீர்பத்ர சிங், முன்னாள் முதல்வர் பிரேம் குமார் துமால் உட்பட முக்கிய பிரபலங்கள் மீண்டும் போட்டியிட்டனர். இந்தத் தேர்தலில் 75.28 சதவீத வாக்குகள் பதிவாகின. காங்கிரஸும் பாஜக.வும் 68 தொகுதிகளிலும் போட்டியிட்டன மாநிலத்தில் நிலவிய ஊழல் மற்றும் ஆளும் அரசு மீதான அதிருப்தி காரணமாக இந்த முறை மீண்டும் பாஜக ஆட்சியை பிடிக்கும் என தொடக்க நிலையில் கருத்து கணிப்புகள் தெரிவித்தன. அதேபோல் தேர்தலுக்கு பிந்தைய வாக்கு கணிப்பிலும் பாஜகவே வெற்றி பெறும் என தெரிவித்தன. இதனால் பாஜக ஆட்சி அமைக்கும் என்ற எதிர்பார்ப்பு பொதுவாகவே எழுந்தது.

இந்நிலையில் அம்மாநிலத்தில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. காலையில் கடும் குளிர் நிலவியதால் வாக்கு எண்ணிக்கை சற்று தாமதமாக தொடங்கின. தொடக்கம் முதலே பாஜக முன்னிலை பெற்று வருகிறது. ஆளும் கட்சியான காங்கிரஸ் பின்னடைவை சந்தித்து வருகிறது.  முதல்வர் வீர்பத்திர சிங், அர்கி தொகுதியில் முன்னிலையில் உள்ளார். அவரது மகன், விக்ரமாதித்ய சிங்கும் முன்னிலையில் உள்ளார். 

அதேசமயம் பாஜகவின் முதல்வர் வேட்பாளர் பிரேம் குமார் துமால் தனது தொகுதியில் குறைவான வாக்குகள் பெற்று பின்னடவை சந்தித்து வருகிறார்.  இமாச்சல பிரதேசத்தை பொறுத்தவரையில் காங்கிரஸின் வீர்பத்திர சிங்கும், பாஜகவின் பிரேம் குமார் துமாலும் அசைக்க முடியாத சக்திகள். 1985களில் இருந்தே இருவரும் வலிமையான தலைவர்களாக வலம் வருகின்றனர்.   இமாச்சல பிரதேசத்தில் தேர்தலுக்கு முன்பே, பாஜகவில் பிரேம் குமார் துமாலுக்கு எதிராக கடும் கோஷ்டி சண்டை நிலவியது. அவரை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க கட்சி தலைமை தயக்கம் காட்டியது. அதேசமயம் துமால் தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என கொடிபிடித்தார்.

இதையடுத்து வேறு வழியின்றி கடைசி நேரத்தில் துமாலை முதல்வர் வேட்பாளராக பாஜக தலைமை அறிவித்தது. துமால் தற்போது தோல்வியுறும் சூழலில் உள்ளார். இறுதி முடிவுகள் வெளியாகி அவர் தோல்வியடைந்தால், வெற்றி பெறும் பாஜக முதல்வர் பதவிக்கு புதிதாக ஒருவரை தேர்வு செய்ய வேண்டும். இமாச்சல பிரதேச பாஜகவில் கடும் கோஷ்டி மோதல் நடந்து வரும் நிலையில் புதிய முதல்வரை தேர்ந்தெடுப்பது பாஜக தலைமைக்கு சவலாக இருக்கும் என்றே அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

         
     

Label