OUR CLIENTS
ஆர்.கே நகர் தேர்தல் வாக்குப்பதிவு நேரடி ஒளிபரப்பு தேர்தல் ஆணையம் தகவல்
ஆர்.கே நகர் தேர்தல் வாக்குப்பதிவு நேரடி ஒளிபரப்பு தேர்தல் ஆணையம் தகவல் Posted on 18-Dec-2017 ஆர்.கே நகர் தேர்தல் வாக்குப்பதிவு நேரடி ஒளிபரப்பு  தேர்தல் ஆணையம் தகவல்

 சென்னை, டிச.18
ஆர்.கே நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஆர்.கே நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கையை நேரடியாக ஒளிபரப்பு செய்ய வேண்டும் என கூறி திமுக வேட்பாளர் மருது கணேஷ் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று அளிக்கப்பட்டிருந்தது. அந்த மனுவில், ஆர்.கே நகர் தொகுதியில் உள்ள தெருக்களின் இரு புறங்களிலும் சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும். கூடுதல் துணை ராணுவப்படையினரை தேர்தல் பணிக்கு அமர்த்த வேண்டும்.  வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கையை இணையதளம் மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். மேலும், இது தொடர்பாக கடந்த 5-ம் தேதி தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குறிப்பிட்டிருந்தார்.

 இன்று   நடைபெற்ற இந்த மனு மீதான விசாரணையின் போது தேர்தல் ஆணையம் தனது பதில் மனுவை தாக்கல் செய்திருந்தது. அதில், ஆர்.கே நகரில் உள்ள 256 வாக்குச் சாவடிகளில் நடைபெறும் வாக்குப்பதிவை நேரடியாக இணையதளத்தில் ஒளிபரப்பு செய்யப்படும். 7 தேர்தல் பார்வையாளர்கள், சிறப்பு பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 15 கம்பெனி துணை ராணுவப்படையினர் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சிசிடிவி கேமரா பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன என தெரிவித்துள்ளது.

மேலும், தேர்தலை ரத்து செய்ய வேண்டும் எனும் எண்ணத்துடன் திமுக செயல்படுவதாகவும், ஒவ்வொரு வாக்காளருக்கும் பணம் கொடுப்பது போல் மிகைப்படுத்தி சித்தரித்து இருப்பதாகவும் குற்றம் சாட்டியிருந்தது. இதற்கு மறுப்பு தெரிவித்த திமுக தரப்பு வழக்கறிஞர், தேர்தல் சிறப்பு அதிகாரி விக்ரம் பத்ரா நியமிக்கப்பட்ட அன்றே 100 கோடி ரூபாய் பணப்பட்டுவாடா நடப்பதாக புகார் வந்ததாக தெரிவித்தார். இதன் பின்னர் திமுக கோரிக்கை விடுத்ததின் பேரில் வழக்கு விசாரணையானது ஒத்தி வைக்கப்பட்டது.
         
     

Label