OUR CLIENTS
காங்கிரசில் இளைஞர்களுக்கு வாய்ப்பு : காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி
காங்கிரசில் இளைஞர்களுக்கு வாய்ப்பு : காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி Posted on 19-Dec-2017 காங்கிரசில்  இளைஞர்களுக்கு வாய்ப்பு : காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி

புதுடெல்லி, 19-
இளைஞர்களுக்கும், புதுமுகங்களுக்கும் காங்கிரஸ் கட்சியில் அதிகமான வாய்ப்புகளை வழங்குவோம். காங்கிரசை விரும்பி வரும் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளிப்போம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறினார்.

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக ராகுல்காந்தி பொறுப்பேற்று உள்ளார்.  சோனியாகாந்தியிடம் இருந்து தலைவர் பதவியை பெற்றுள்ள அவர் கட்சியில் இளைஞர்களுக்கும், புதுமுகங்களுக்கும் வாய்ப்பு கொடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார். 

இதுதொடர்பாக ராகுல் காந்தி அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-  காங்கிரஸ் கட்சியில் மாற்றங்களை கொண்டு வருவது அவசியமான ஒன்றாகும். பல்வேறு தரப்பு மக்கள் விரும்பும் வகையில் கட்சி செயல்பட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும்.  இளைஞர்களுக்கும், புதுமுகங்களுக்கும் கட்சியில் அதிகமான வாய்ப்புகளை வழங்குவோம். காங்கிரசை விரும்பி வரும் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளிப்போம். இளைஞர் காங்கிரசுக்கு முன்னுரிமை அளித்து அதற்கு அதிகப்படியான வேலைகளை செய்தது பலன் அளித்தது. எனவே கட்சியில் இளைஞர்களையும், புதுமுகங்களையும் கொண்டு வருவோம். 

மன்மோகன்சிங் போன்ற சிறந்த அரசியல்வாதிகளை தான் நான் விரும்புகிறேன். அரசியல் என்றால் பயம் இல்லாமல் இருக்க வேண்டும்.  பா.ஜனதா சமூகத்தை பிளவுப்படுத்தி அரசியலில் பயத்தை ஏற்படுத்தும் செயலில் ஈடுபட்டு வருகிறது.  இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

Label