OUR CLIENTS
வாட்ஸ் அப்பில் பிரசாரம் செய்யும் ஸ்டாலின்
வாட்ஸ் அப்பில் பிரசாரம் செய்யும் ஸ்டாலின் Posted on 19-Dec-2017 வாட்ஸ் அப்பில் பிரசாரம் செய்யும் ஸ்டாலின்

சென்னை, டிச.19-
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான பிரச்சாரத்தை வாட்ஸ் அப் மூலம் தொடங்கியுள்ளார் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்.

வரும் டிசம்பர் 21ம் தேதி ஆர்.கே.நகர் தொகுதிக்கு சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் அந்த தொகுதியில் பணப்பட்டுவாடா சூடுபிடித்துள்ளது. ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற இருந்த இடைத்தேர்தல்  பணப்பட்டுவாடா காரணமாக ரத்துசெய்யப்பட்டதைக் கருத்தில் கொண்டு தேர்தல் ஆணையம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறது.

இந்நிலையில், திமுக வேட்பாளர் மருது கணேஷை ஆதரித்து  செயல் தலைவர் ஸ்டாலின், வாட்ஸ் அப் மூலமாகவே தன் பிரச்சாரத்தை ஆரம்பித்துவிட்டார். “மருது கணேஷ் கொளத்தூர் செல்லப்பிள்ளை. ஆனால், ஆர்.கே.நகரின் வளர்ப்புப் பிள்ளையாக கருதி வளர்ச்சி பணிகளை மேற்கொள்வார். அனைத்து நிலைகளிலும் தமிழகம் பின்தங்கியுள்ளது. மாநிலத்தின் உரிமைகளை ஒவ்வொன்றாக மாநில அரசு இழந்து வருகிறது. அரசை மாற்றுவதற்கான தொடக்க புள்ளியாக ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அமையட்டும்.” என்று ஸ்டாலின் பேசும் வீடியோ தற்போது வாட்ஸ் அப் மூலம் பரவி வருகிறது.

Label