OUR CLIENTS
ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் வாக்காளர்கள் அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும் : தேர்தல் ஆணையம் திட்டவட்ட அறிவிப்பு
ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் வாக்காளர்கள் அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும் : தேர்தல் ஆணையம் திட்டவட்ட அறிவிப்பு Posted on 19-Dec-2017 ஆர்.கே. நகர்  இடைத்தேர்தல் வாக்காளர்கள் அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும் : தேர்தல் ஆணையம் திட்டவட்ட அறிவிப்பு

சென்னை, டிச.19-
சென்னை & ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் வாக்களிக்கும் வாக்காளர்கள் தங்கள் வாக்கை பதிவு செய்யும் வாக்குச்சாவடியில் பணியிலிருக்கும் தேர்தல் அலுவலர்களிடம் தங்களது அடையாள அட்டையைக் கட்டாயம் காண்பிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கு  11-டாக்டர்.இராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்ற தொகுதியில் 21.12.2017 அன்று நடைபெறவிருக்கின்ற இடைத் தேர்தலில் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ள அனைத்து வாக்காளர்களும், அவர்கள் வாக்களிப்பதற்கு முன்னர், வாக்குச்சாவடியில் தங்கள் அடையாளத்தை மெய்ப்பிப் பதற்கான வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை அளிக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.   வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை அளிக்க இயலாத அத்தகைய வாக்காளர்கள், அவர்களின் அடையாளத்தை மெய்ப்பிப்பதற்காக, பின்வரும் மாற்று புகைப்பட அடையாள ஆவணங்களில் ஏதேனுமொன்றை காண்பிக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் ஆணையிட்டுள்ளது.

(வீ)     கடவுச்சீட்டு;              
(வீவீ)    ஓட்டுநர் உரிமம்;   
(வீவீவீ)    மத்திய / மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களால் / வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களால்  தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப் படத்துடன் கூடிய பணி அடையாள அட்டைகள்;               
(வீஸ்)   வங்கி / அஞ்சலக கணக்குப் புத்தகங்கள் (புகைப்படத்துடன் கூடிய) ;  
(ஸ்)    நிரந்தர கணக்கு எண் அட்டை (றிகிழி சிணீக்ஷீபீ);     
(ஸ்வீ)    தேசிய மக்கள்தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு
(ஸ்வீவீ)    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணி அட்டை;
(ஸ்வீவீவீ)   தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு ஸ்மார்ட் கார்டு;             
(வீஜ்)    புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்;       
(ஜ்)      தேர்தல் நிர்வாகத்தினரால் வழங்கப்பட்ட அனுமதி யளிக்கப்பட்ட வாக்காளர் புகைப்படச்சீட்டு;  
(ஜ்வீ)      பாராளுமன்ற / சட்டமன்ற / சட்ட மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கபட்டுள்ள அலுவலக  அடையாள அட்டை; மற்றும்        
(ஜ்வீவீ)      ஆதார் அட்டை
2.  ஒரு வாக்காளர் வேறொரு சட்டமன்ற தொகுதியின் வாக்காளர் பதிவு அதிகாரியால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை வைத்திருப்பா ரேயானால் அந்த அடையாள அட்டையையும் இந்திய தேர்தல் ஆணையம் காட்டும் ஆவணமாகப் பயன்படுத்தலாம். ஆனால் அந்த வாக்காளருடைய பெயர் அந்த வாக்குச் சாவடிக்குரிய வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருக்க வேண்டும். வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை அல்லது 
இந்திய தேர்தல் ஆணையத்தால் வரையறுக்கப்பட்ட மேற்கூறிய எந்த ஒரு அடையாள ஆவணம் வைத்திருப்பதால் மட்டுமே ஒரு வாக்காளர் தனது வாக்கைச் செலுத்தி விட முடியாது. அவருடைய பெயர் வாக்குச் சாவடிக்கு அனுப்பப்பட்ட வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்தால் மட்டுமே அவர் வாக்குரிமையைச் செலுத்த தகுதியுடையவர் ஆவார்.  இவ்வாறு, தேர்தல் ஆணையம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Label