OUR CLIENTS
மீனவ&விவசாய பிரதிநிதிகளிடம் குறைகளை கேட்டறிந்த மோடி :உடனடி நிவாரணம் வழங்க உத்தரவு!
மீனவ&விவசாய பிரதிநிதிகளிடம் குறைகளை கேட்டறிந்த மோடி :உடனடி நிவாரணம் வழங்க உத்தரவு! Posted on 20-Dec-2017 மீனவ&விவசாய பிரதிநிதிகளிடம் குறைகளை கேட்டறிந்த மோடி :உடனடி நிவாரணம் வழங்க உத்தரவு!

கன்னியாகுமரி, டிச.20-
கன்னியாகுமரி மாவட்ட மீனவ அமைப்புகளைச் சேரந்தவர்களின் பிரதிநிதிகளையும், விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளையும் கன்னியாகுமரி மாவட்ட அரசு விருந்தினர்  மாளிகையில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று சந்தித்து ஒகி புயலால் அவர்கள் அடைந்த பாதிப்புகளையும் குறைகளையும் கேட்டறிந்தார். பல்வேறு தரப்பினரும் தந்த கோரிக்கை மனுக்களை பிரதமர் மோடி பெற்றுக்கொண்டார். அவற்றை விரைவில் பரிசீலித்து மத்திய குழுவை அனுப்பவதாக தெரிவித்தார்.


நிவாரணம் தொடர்பாக டெல்லி சென்றதும் அறிவிப்பு ஒன்றை பிரதமர் வெளியிட்டார் இதன்படி புயலால் பாதிக்கப்பட்ட தமிழ்நாடு, கேரளம், லட்சத்தீவுகளுக்கு சேர்த்து ரூ 325 கோடி உடனடியாக வழங்கப்படும். வீடுகளை இழந்தவர்களுக்கு வீடுகளும் அதைக் கட்ட ரூ.1.5 லட்சமும் வழங்கப்படும். புயலினால் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு 
ரூ.2 லட்சமும், காயமடைந்த வர்களுக்கு ரூ. 50,000மும் வழங்கப்படும்.

கடந்த நவம்பர் மாதம் 30 ந்தேதி வீசிய ஒகி புயல் குமரி மாவட்டத்தில் பேரிழப்பை ஏற்படுத்தியது. புயலால் ஏற்பட்ட சேதங்கள், பாதிப்புகளை பார்வையிட பிரதமர் நரேந்திரமோடி நேற்று பிற்பகல் கன்னியாகுமரி வந்தார். திருவனந்தபுரத்தில் இருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு மதியம் 2.45 மணிக்கு வந்து சேர்ந்தார்.முன்னதாக லட்சத்தீவுகளில் ஒன்றான கவரட்டியிலிருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வந்திறங்கினார் பிரதமர். கேரள முதல்வர் விஜயன், கேரள அமைச்சர்கள், உயர் அதிகாரிகள், கேரள பாஜக பிரமுகர்கள் பிரதமரை வரவேற்றனர். அங்கிருந்து ஹெலிகப்டர் மூலம் கன்னியாகுமரிக்கு வந்து சேர்ந்தார் பிரதமர் மோடி.

அவரை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் தமிழக அரசின் தலைமை செயலாளர், முதன்மை செயலாளர்கள் வரவேற்றனர். குமரி மாவட்டத்தில் ஒகி புயல் தாக்கியபோது எடுக்கப்பட்ட படங்கள் அனைத்தும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் காட்சிப்படுத்தப்பட்டு துறைவாரியாக அங்கு வைக்கப்பட்டிருந்தன. அவற்றை பிரதமர் மோடி பார்வையிட்டார். அவருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அரசின் முதன்மை செயலாளர்கள் ஒகி புயல் பாதிப்புகள் குறித்து படங்கள் உதவியுடன் விளக்கம் அளித்தனர்.
கன்னியாகுமரி மாவட்ட விருந்தினர் மாளிகையில், ஒகி புயல் பாதிப்பு குறித்து பிரதமர் மோடி, ஆளுநர், முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.

ஒகி புயல் பாதிப்பு குறித்து பிரதமர் மோடியிடம் விளக்கினார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி. மீனவர்கள், விவசாயிகள் பாதிப்பு குறித்து கேட்டறிந்தார் பிரதமர். ஒகி புயல் சேத அறிக்கையை பிரதமரிடம் சமர்ப்பித்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

ஒகி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நிரந்தரமாக புனரமைக்க தமிழகத்திற்கு உரிய நிதியை ஒதுக்க பிரதமர் மோடியிடம் முதல்வர் கோரிக்கை வைத்து உள்ளார்.

ஓகி புயலால் ஏற்பட்ட பாதிப்புக்கு நிவாரணமாக ரூ 4047 கோடி வழங்கவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். பிரதமர் மோடி வருவதையொட்டி குமரி மேற்கு மாவட்ட கடற்கரை கிராமங்களான தூத்தூர், இரயுமன்துறை, பூத்துறை, சின்னத்துறை, இரவிபுத்தன் துறை, நீரோடி உள்பட 8 கடற்கரை கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் மற்றும் அங்குள்ள ஆலய பங்கு தந்தையர்கள், கன்னியாகுமரிக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களை கருத்தரங்கு கூடத்தில் பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அவர்களின் கோரிக்கைகளை மோடி கேட்டறிந்தார். மேலும் அவர்களுக்கு ஆறுதல் கூறினார். அவர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண உரிய நடவைடிக்கைகள எடுக்கப்படும் என பிரதமர் உறுதியளித்தார்.

பயிர், நிலங்கள் சேதமடைந்ததால் பாதிப்புக்கு ஆளான விவசாயிகளையும் அவர்களின் பிரதிநிதிகளையும் பிரதமர் சந்தித்து பேசினார். விவசாய சங்கப் பிரதிநிதிகள் முன்வைத்த கோரிக்கைகளையும் அவர்கள் கூறிய  கருத்துக்களையும் பிரதமர்  கேட்டறிந்தார். உரிய நிவாரண நடவடிக்கைகள மேற்கொள்ளப்படும் எனவும் பிரதமர் அவர்களிடம் தெரிவித்தார்.

கன்னியாகுமரியில் பிரதமர் மோடியுடனான சந்திப்பின்போது, மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், 
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், மக்களவை துணைத்தலைவர் தம்பித்துரை, மாநில பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் சவான் ஆகியோரும் உடன் இருந்தனர்.
பின்னர் பிரதமர் மோடி மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் புறப்பட்டார். அங்கு ஒகி புயலால் பெரிதும் பாதிக்கப்பட்ட 22 கி.மீ. தொலைவில் உள்ள பூந்துறை கடற்கரை கிராமத்திற்கு சென்று நேரில் பார்வையிட்டார். அங்குள்ள மீனவர்களுக்கு ஆறுதல் கூறிய பின்பு திருவனந்தபுரம் திரும்பினார்.

லட்சத் தீவு - கவரட்டி தீவில் பிரதமர் மோடி ஒகி புயல் பாதிப்பு குறித்து விசாரித்த போது கேரள முதல் மந்திரி மற்றும் அதிகாரிகளுடன் மாலை சந்தித்துப் பேசினார். கேரள முதலவர் முன்வைத்த கோரிக்கைகளை பிரதமர் மோடி கேட்டறிந்தார். ஒகி புயல் பாதித்த பகுதிகளை பேரிடர் பதித்த பகுதிகளாக மத்திய அரசு அறிவிக்க வேண்டுமென கேரள முதல்வரும் கேட்டுக்கொண்டார். இந்த நிகழ்வுகளுக்குப் பின் மாலை திருவனந்தபுரத்தில் இருந்து விமானம் மூலம் பிரதமர்  டெல்லி திரும்பினார்.  

நிவாரணம் அறிவிப்பு
ஒகி புயலால் பாதிக்கப்பட்ட தமிழ்நாடு, கேரளம், லட்சத்தீவுகளில் நேரில் சுற்றிப்பார்த்து குறைகளை கேட்டறிந்தார் பிரதமர் மோடி.
நிவாரணப் பணிகளுக்கு அந்தந்த மாநில நிர்வாகங்களுக்கு உதவும் வகையில் கீழ்க்காணும் நிவாரண திட்ட அறிவிப்புகளையும் பிரதமர் நேற்று டெல்லியில் வெளியிட்டார்.

பிரதமரின் நிவாரண அறிவிப்பு விவரம்:
1)  உடனடியாக தமிழ்நாடு, கேரளம், லட்சத்தீவு நிர்வாகங்களுக்கு உதவ ரூபாய் 325 கோடி விடுவிக்கப்படும். பிரதமர் இன்று அறிவித்த 325 கோடி ரூபாய் ஏற்கனவே தமிழகம், கேரளம், லட்சத்தீவுகளுக்கு அறிவித்த தொகைக்கும் கூடுதலாக வழங்கப்படுவதாகும்.

2) ஒகி புயலால் முழுமையாக 
வீடுகளை இழந்தவர்களுக்கு சுமாராக 1,400 வீடுகள் பிரதம மந்திரி அவாஸ் யோசனா திட்டத்தின்கீழ் கட்டித்தரப்படும்.
3) இந்த திட்டத்தின்கீழ் வீடுகளைப் பெறும் பயனாளிகளுக்கு ரூ. 1.5 லட்சம் வீட்டைக் கட்டுவதற்கு உதவியாக வழங்கப்படும்.

4) புயலால் பாதிக்கப் பட்டவர்கள் காப்பீடு செய்திருந்தால் காப்பீட்டுக் கோரிக்கைகளை உடனடியாக வழங்கும்படி காப்பீட்டு நிறுவனங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
5) பிரதமரின் 
தேசிய நிவாரண நிதியில் இருந்து புயலினால் உயரிழந்தவர் குடும்பத்திற்கு கருணை கொடையாக 
ரூ 2 லட்சம் வழங்கப்படும்.
6) கடுமையாக காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்படும்
இவ்வாறு, பிரதமரின் நிவாரண நிதி திட்ட அறிவிப்பு கூறுகிறது.

Label