OUR CLIENTS
ஆவணங்கள், தகவல்கள் ஹேக்கிங்கை தடுக்க புதிய தொழில்நுட்பம் மேற்கு வங்காள அரசு
ஆவணங்கள், தகவல்கள் ஹேக்கிங்கை தடுக்க புதிய தொழில்நுட்பம் மேற்கு வங்காள அரசு Posted on 20-Dec-2017 ஆவணங்கள், தகவல்கள்  ஹேக்கிங்கை தடுக்க புதிய தொழில்நுட்பம் மேற்கு வங்காள அரசு

கொல்கத்தா, டிச. 20-
அரசின் முக்கிய ஆவணங்கள் மற்றும் தகவல்கள் ஆன்லைனில் பதிவு செய்யப்படுகின்றன. அதே சமயம் தகவல்கள் எளிதாக சிலரால் திருடப்படுகின்றது.

இந்நிலையில், மேற்கு வங்காள அரசு சைபர் ஹேக்கிங்கில் இருந்து அரசு ஆவணங்களை காப்பாற்ற புதிய தொழில்நுட்பட்த்தை அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.

பிளாக்செய்ன் எனப்படும் இந்த தொழில்நுட்பம் முக்கிய தகவல்கள் மற்றும் ஆவணங்கள் ஹேக்கிங் செய்யப்படுவதை தடுக்கிறது. இந்த தொழில்நுட்பம் கல்வி, சட்டம் மற்றும் அனைத்து துறைகளிலும் நடைமுறைப்படுத்த உள்ளது. இது குறித்து சைபர் பாதுகாப்பு மையம் பல ஆராய்ச்சி செய்துவருகிறது. மாநில அரசானது தனியார் நிறுவனங்களுடன் இணைந்து பணி புரிகிறது. மேலும், அரசு அனைவரிடமும் சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். சமீபத்தில் போலீஸ் அதிகாரிகளுக்கு சைபர் பாதுகாப்பு குறித்து வகுப்புகள் நடத்தியது குறிப்பிடத்தக்கது. 

இந்த ஆண்டின் தொடக்கத்தில் மேற்கு வங்காளத்தில் உள்ள மின்சார பகிர்வு நிறுவனத்தில் உள்ள கம்பியூட்டர்கள் ரான் சம்வேர் என்னும் ஹேக்கிங் வைரசாலால் பாதிக்கப்பட்டது. அது போன்ற பிரச்சனைகள் மீண்டும் வராமல் இருக்க இது போன்ற முன்னெச்சரிக்கை நட வடிக்கைகள் எடுக்கப்  படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Label