OUR CLIENTS
ஜம்மு காஷ்மீரில் 2 பயங்கராவாதிகள் சுட்டுக் கொலை
ஜம்மு காஷ்மீரில் 2 பயங்கராவாதிகள் சுட்டுக் கொலை Posted on 20-Dec-2017 ஜம்மு காஷ்மீரில் 2 பயங்கராவாதிகள் சுட்டுக் கொலை

ஸ்ரீநகர், டிச. 20-
ஜம்மு காஷ்மீர் சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நேற்று 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் இருதரப்பினருக்கும் இடையே நடந்த இந்த தாக்குதலில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து நேற்று முன்தினம் மாலை பாதுகாப்புப் படையினர் அந்த பகுதி முழுவதும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதற்கு பாதுகாப்புப் படையினரும் எதிர்த்தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்புப் படையிருக்கு இடையே நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஒரு பெண் ஒருவர் காயமடைந்தார். அவரை மீட்டு மருத்துமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனியின்றி அந்த பெண் உயிரிழந்தார் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.  

Label