OUR CLIENTS
ஜி.எஸ்.டி வரியின் கீழ் பெட்ரோல், டீசலை கொண்டுவர மத்திய அரசு விருப்பம்
ஜி.எஸ்.டி வரியின் கீழ் பெட்ரோல், டீசலை கொண்டுவர மத்திய அரசு விருப்பம் Posted on 20-Dec-2017 ஜி.எஸ்.டி வரியின் கீழ் பெட்ரோல், டீசலை கொண்டுவர மத்திய அரசு விருப்பம்

புதுடெல்லி, டிச.20-
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயுவை, ஜிஎஸ்டி வரிவிதிப்பின் கீழ் கொண்டு வருவதற்கு மத்திய அரசு விரும்புகிறது, அதேசமயம் மாநில அரசுகளின் ஒப்புதலுடன் மட்டுமே இதை செயல்படுத்துவோம் என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறினார்.

மாநிலங்களவையில் நேற்று தெலுங்குதேசம் உள்ளிட்ட கட்சி எம்.பி.க்கள், ஜிஎஸ்டியின் கீழ் பெட்ரோல், டீசல் கொண்டு வரப்படுமா ? என கேள்வி எழுப்பினர்.

இதற்குப் பதிலளித்த நிதியமைச்சர் அருண் ஜெட்லி, ''பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயுவை, ஜிஎஸ்டி வரிவிதிப்பின் கீழ் கொண்டு வருவதற்கு மத்திய அரசு ஆதரவு தெரிவிக்கிறது. எனினும் பெட்ரோலிய பொருட்களுக்கு பல்வேறு மாநிலங்களிலும் பல்வேறு விகிதங்களில் மதிப்புக்கூட்டு வரி வசூலிக்கப்படுகிறது. எனவே இவற்றை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வருவதற்கு சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுடன் பேசி முடிவெடுக்க வேண்டும். மாநில அரசுகளின் ஒப்புதலுடன் மட்டுமே இதை செயல்படுத்த முடியும். அனைத்து மாநில அரசுகளின் கருத்துகளைக் கேட்டு அதனடிப்படையில் முடிவெடுக்கப்படும்'' எனக் கூறினார்.

அப்போது, முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் குறுக்கிட்டுப் பேசுகையில், ''மத்தியிலும், 19 மாநிலங்களிலும் பாஜக ஆட்சி நடத்துகிறது. எனினும், பெட்ரோலியப் பொருட்களை ஏன் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரித்திட்டத்தின் கீழ் கொண்டு வரவில்லை. இந்த பிரச்சினை குறித்து ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்படுமா?'' என கேள்வி எழுப்பினார். அதற்கு மீண்டும் பதில் அளித்த மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, ''நிச்சயம் விவாதிக்கப்படும்'' என்று தெரிவித்தார்.

Label