OUR CLIENTS
ரயில் டிக்கெட் முன்பதிவிலும் கட்டணத் தள்ளுபடி
ரயில் டிக்கெட் முன்பதிவிலும் கட்டணத் தள்ளுபடி Posted on 20-Dec-2017 ரயில் டிக்கெட் முன்பதிவிலும் கட்டணத் தள்ளுபடி

புதுடெல்லி, டிச. 20-

விமானங்கள், ஓட்டல்கள், வர்த்தக நிறுவனங்களில் கட்டணத் தள்ளுபடி போல ரயில்வேயும் டிக்கெட் முன் பதிவுக்கு தள்ளுபடி தர முன் வந்துள்ளது.

ரயில்களில் சில சமயங்களில் டிக்கெட் முழுமை யாக முன்பதிவு செய்யப்படாமல், இரு க்கைகள் காலியாக செல்லும் நிலை உள்ளது.

எனவே அந்த நேரத்தில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது, ரயில்களில் டிக்கெட் முழுமையாக ரயில்வேயில் ‘பிளக்சி பேர்’ கட்டண  திட்டத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் ரயில் டிக்கெட் முன்பதிவு ஆவதைப் பொருத்து 10 சதவீதத்தில் இருந்து 50 சதவீதம் வரை கட்டணம் படிப்படியாக உயர்த்தப்படும்.
இந்த திட்டத்துக்கு பயணி களிடம் போதிய வரவேற்பு இல்லை. கட்டண உயர்வினால் ரயில்வேக்கு வருமானம் கிடைத்தது. எனவே இந்த‘பிளக்சி கட்டணம்’ குறித்து  ஒரு குழு ஆய்வ- செய்து அறிக்கை அளித்தது. அது பற்றி ரயில்வே மந்திரி  பியூஷ் கோயல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் நிருபர்களிடம் பேசிய மந்திரி கோயல், விமானங்களிலும், ஓட்டல்களிலும் வாடிக்கை யாளர்களுக்கு கட்டணத்தில் வழங்கப்படும் தள்ளுபடி போல், ரயிலிலும் கட்டணத் தள்ளுபடி அளிக்கப்படுவது  ஆய்வு செய்கிறோம். டிக்கெட் கட்டணத்தை உயர்த்தாமல், ரயில்வேயை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும் விஷயங்கள் விவாதிக்கப்பட்டு வரு கின்றன.

ரயில்களில் டிக்கெட் முன்பதிவு முழுமையாக இல்லாத போது, ஒட்டல்கள், விமானங்களில் இருப்பதைப் போல் கட்டணத் தள்ளுபடி தரப்படும். முதலில் டிக்கெட் கட்டணம் குறைவாகவும், முன்பதிவு அதிகமாகும்போது கட்டணத்தை உயர்த்தவும் கூறியுள்ளனர். இது பற்றி பரிசீலிக்கப்படும் என்றார்.

Label