OUR CLIENTS
மோடி மீதான நம்பகத்தன்மை கேள்விக்குறியாகி விட்டது
மோடி மீதான நம்பகத்தன்மை கேள்விக்குறியாகி விட்டது Posted on 20-Dec-2017 மோடி மீதான நம்பகத்தன்மை கேள்விக்குறியாகி விட்டது

புதுடெல்லி, டிச.20-
குஜராத் மாநிலத்தை கடந்த 1995-ம் ஆண்டுமுதல் தொடர்ந்து ஆண்டுவந்த பா.ஜ.க. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது.

ஆட்சி அமைக்க தேவையான அறுதிப் பெரும்பான்மையைவிட 6 இடங்களை மட்டுமே அதிகமாக கைப்பற்றியுள்ள அக்கட்சிமுன்னர் தனது வசமிருந்த சில தொகுதிகளை காங்கிரசிடம் பறிகொடுத்துள்ளது. மேலும், பிரதமர் மோடி பிறந்து, வளர்ந்த உன்ஜா தொகுதியில் தொடர்ந்து ஆறுமுறை எம்.எல்.ஏ.வாக பதவி வகித்த பா.ஜ.க. வேட்பாளரை காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பெண் வேட்பாளர் ஆஷா பட்டேல் சுமார் 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.

இந்நிலையில், நேற்று பாராளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடி மீதான நம்பகத்தன்மை கேள்விக்குறியாகி விட்டதைதான் குஜராத் தேர்தல் முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன என குறிப்பிட்டுள்ளார். ‘மூன்று- நான்கு மாதங்களுக்கு முன்னர் நாங்கள் குஜராத்துக்கு சென்றபோது பா.ஜ.க.வை எதிர்த்து காங்கிரசால் போராட முடியாது என்று கூறப்பட்டது.

மூன்று-நான்கு மாதங்கள் நாங்கள் கடுமையாக உழைத்ததற்கு கிடைத்த பலனின் முடிவுகளை நீங்கள் பார்க்கிறீர்கள். பா.ஜ.க. மிகப்பெரிய அடியை வாங்கி உள்ளது. மோடியின் வளர்ச்சி மாதிரியை குஜராத் மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அவரது பிரசாரம் மற்றும் விற்பனை யுக்தி 

நன்றாக இருக்கிறது. ஆனால், உள்ளே ஒன்றுமில்லாமல் வெற்றிடமாக உள்ளது. எங்களது பிரசாரத்துக்கு அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை.

பா.ஜ.க.வின் வெறுப்பு அரசியலை காங்கிரஸ் அன்பால் எதிர்கொள்ளும். மோடியின் கோபம் 
உதவாது என்பதை 
குஜராத் மக்கள் உணர்த்தியுள்ளனர். சேவை மற்றும் சரக்கு வரி மற்றும் முன்னேற்றம் தொடர்பாக பேச மறுக்கும் மோடியின் முடிவு அவரது நம்பகத்தன்மை குறித்த சந்தேகத்தை மேலும் அதிகமாக்கியுள்ளது. மோடியிடம் நம்பகத்தன்மை பிரச்சனை உள்ளதால் அவரது நம்பகத்தன்மை குறித்த கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.’ என ராகுல் காந்தி தெரிவித்தார். 

Label