OUR CLIENTS
ஓய்வூதியம் தர லஞ்சம் கூட்டுறவு அதிகாரிக்கு 7 ஆண்டு சிறை
ஓய்வூதியம் தர லஞ்சம் கூட்டுறவு அதிகாரிக்கு 7 ஆண்டு சிறை Posted on 20-Dec-2017 ஓய்வூதியம் தர லஞ்சம் கூட்டுறவு அதிகாரிக்கு 7 ஆண்டு சிறை

அரியலூர், டிச.20-
ஓய்வூதியம் தருவதற்காக  6 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற கூட்டுறவு அதிகாரிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் கூட்டுறவு வங்கியில் மருதூரை சேர்ந்த ராமலிங்கம் என்பவரிடம் கடந்த 31.01.2013 அன்று ஓய்வூதியம் பெறுவதற்கு 6 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற வழக்கில் ஜெயங்கொண்டம் கூட்டுறவு தனி அலுவரான ராஜேந்திரன் என்பவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், 30ஆயிரம் அபராதமும் விதித்து அரியலூர் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இதேபோல், கடந்த 31.07.2012 ஆண்டு அரியலூர் மாவட்டம், வரதராஜன் பேட்டையிலுள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியை ராணிக்கு பணிநிரந்தரம் மற்றும் கூடுதல் ஊதியம் பெற்றுத்தருவதாக கூறி 6ஆயிரம் ரூபாய் லஞ்சமாக பெற்ற உடையார்பாளையம், மாவட்ட கல்வி அலுவலகத்தில் உதவியாளராக பணி யாற்றிவந்த குமார் என்பவருக்கு 7ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 12ஆயிரம் அபராதம் விதித்து தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் ரவி தீர்ப்பு வழங்கினார். 

Label