OUR CLIENTS
போலி மடிக்கணினிகள் வழங்கப்பட்டதால் பள்ளி மாணவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார்
போலி மடிக்கணினிகள் வழங்கப்பட்டதால் பள்ளி மாணவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் Posted on 20-Dec-2017 போலி மடிக்கணினிகள் வழங்கப்பட்டதால் பள்ளி மாணவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார்

தேனி, டிச.20-
தேனி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இலவச அரசு மடிக்கணினிகள் போலியானவை என தெரிந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த பள்ளி மாணவர்கள் ஊர்வலமாக சென்று மாவட்ட ஆட்சியரிடம் புகார் செய்தனர்.
 
பள்ளி மாணவர்கள் சிறந்த கல்வி வளர்ச்சியை பெறும் விதமாக கடந்த ஆட்சியின் போது பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்தை மறைந்த முதல்வர் ஜெயலலிதா துவங்கி வைத்தார். அவர் மறைந்த பின்னரும் தற்போதும் அந்த திட்டத்தை தமிழக அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. தேனி மாவட்டத்தில் 2016-17-ம் கல்வி ஆண்டிற்கான இலவச மடிக்கணினிகள் வழங்கும் நிகழ்வு கடந்த மாதம் நடைபெற்றது. இதில் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் கலந்து கொண்டு மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கினார்.

இதனை தொடர்ந்து தேனி மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு இலவச மடிக்கணிகளை வழங்கும் பணியை மாவட்ட கல்வித்துறை துவங்கியது. உத்தமப்பாளையம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் கடந்த மாதம் 28-ம் தேதி, 100-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப் பட்டது. இதில் சுமார் 30 மடிக்கணினிகள் போலியானவை என புகார் அளிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட 30 மடிக்கணிகளிலும் அரசு முத்திரை எதுவும் இல்லை. மேலும் அந்த மடிக்கணினிகள் செயல்படவும் இல்லை. இதுகுறித்து மாணவர்கள் பள்ளி தலைமையாசிரியரிடம் முறையிட்டுள்ளனர். 
ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் மாவட்ட கல்வித்துறையிடம் மாணவர்கள் புகார் அளிக்கவே அங்கும் எந்த பதிலும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் நேற்று முன்தினம் செயல்படாத மடிக்கணினிகளுக்கு மாலையிட்டு ஊர்வலமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு எடுத்து வந்தனர். ஆட்சியரிடம் போலி மடிக்கணினி குறித்து புகார் அளிக்க சென்றவர்களை முதலில் காவல் துறையினர் தடுத்தனர்.  பின்னர் சிறிது நேரத்திற்கு பிறகு காவல் துறை அவர்களை அனுமதித்துள்ளது.

Label