OUR CLIENTS
ரேஷனில் பச்சரிசி, சர்க்கரை பொங்கலை முன்னிட்டு ஸ்டாக்
ரேஷனில் பச்சரிசி, சர்க்கரை பொங்கலை முன்னிட்டு ஸ்டாக் Posted on 20-Dec-2017 ரேஷனில் பச்சரிசி, சர்க்கரை பொங்கலை முன்னிட்டு ஸ்டாக்

சென்னை, டிச.20-
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ரேஷன் கடைகளில், பச்சரிசி மற்றும் சர்க்கரையை, முழு அளவில் இருப்பு வைக்குமாறு, அதிகாரிகளுக்கு, கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து, நுகர்வோர் பணிகளுக்கான கூட்டுறவு துறை கூடுதல் பதிவாளர், மண்டல இணை பதிவாளர்களுக்கு, நேற்று அனுப்பியுள்ள சுற்றறிக்கை: பொங்கலை முன்னிட்டு, ரேஷன் கார்டுதாரர்களுக்கு, உரிய நேரத்தில் பொருட்கள் வழங்கும் வகையில், ரேஷன் கடைகளுக்கான பொருட்கள் சப்ளையை, டிச., 19ல் இருந்து துவக்க, மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற வேண்டும். 

விடுமுறை தினங்களான, டிச., 24, 31 மற்றும் ஜன., 7 ஆகிய தினங்களில், 100 சதவீத பொருட்கள் சப்ளையை, ஜன., 10க்குள் முடிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.கிடங்குகளில்,
பொருட்கள் இருப்பு இல்லை எனில், கலெக்டர் மற்றும் நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர், உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பொங்கல் சமயத்தில்,பச்சரிசி, சர்க்கரை போதுமான அளவிற்கு, அனைத்து வேலை நாட்களிலும் இருப்பு உள்ளதை, உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Label