OUR CLIENTS
வேலூர் சிறை உள்ள சாலையில் இரவு நேரம் போக்குவரத்துக்கு தடை
வேலூர் சிறை உள்ள சாலையில் இரவு நேரம் போக்குவரத்துக்கு தடை Posted on 20-Dec-2017 வேலூர் சிறை உள்ள சாலையில் இரவு நேரம் போக்குவரத்துக்கு தடை

வேலூர், டிச.20-
கைதி தப்பிச் சென்றதையடுத்து, வேலூர் சிறை உள்ள சாலையில், இரவு நேரம் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

வேலூர், தொரப்பாடியில் மத்திய ஆண்கள் சிறை உள்ளது. திருப்பத்தூர் அடுத்த, சின்ன கந்திலியை சேர்ந்த விசாரணை கைதி சகாதேவன், 42, கடந்த, 14 அதிகாலை, 3:00 மணிக்கு தப்பிச்சென்றான். 14 மணி நேரத்தில் தனிப்படை போலீசார், பர்கூரில் சகாதேவனை பிடித்து, மீண்டும் வேலூர் சிறையில் அடைத்தனர். பின்னர், பாதுகாப்பு காரணங்களுக்காக சேலம் சிறைக்கு மாற்றப்பட்டான். கைதி தப்பிச் சென்றது குறித்து, சிறைத்துறை வேலூர் டி.ஐ.ஜி., பாஸ்கரன், பாகாயம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறைத்துறை உளவுத்துறையினர், தனியாக விசாரணை செய்து, 60 பக்க அறிக்கையை சென்னைக்கு அனுப்பினர். இதையடுத்து கைதி தப்பியபோது, சிறைக்குள் பணியில் இருந்த, 15வது பட்டாலியனை சேர்ந்த, 90 போலீசார், சிறை காவலர்கள் 20 பேர், வார்டன்கள் 10 பேர் மற்றும் சிறைக்கு வெளியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த தமிழ்நாடு சிறப்பு காவல் படையை சேர்ந்த 20 பேர் என மொத்தம், 140 போலீசார் கடந்த மூன்று நாட்களாக சேலம், திருச்சி, மதுரை, சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டனர். இதற்கான பணியிட மாறுதல் உத்தரவு, அவர்களுக்கு வழங்கப்பட்டது. அதில், பணியின் போது அஜாக்கிரதையாக இருந்து, கைதியை தப்பிக்கவிட்ட குற்றத்துக்காக, மாற்றப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கைதி தப்பிய வழக்கில், எப்போது அழைத்தாலும் விசாரணைக்கு வர வேண்டும் என, அவர்களிடம் தனித்தனியாக எழுதி வாங்கப்பட்டுள்ளது. மாறுதலில் சென்றவர்களுக்கு பதிலாக சென்னை, கடலூர், சேலம், கோவை சிறைகளில் இருந்து போலீசார், வேலூர் சிறைக்கு வந்துள்ளனர். கைதி தப்பிச் சென்றதையடுத்து, பாகாயம்- தொரப்பாடி சாலையில் இரவு 12 மணி முதல் அதிகாலை 4 மணி வரை, போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆம்புலன்ஸூக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சிறைத்துறை அதிகாரிகள் கூறியதாவது: தினமும் காலை 6 மணி, மாலை 6 மணிக்கும் சிறையில் ரோல்கால் நடத்தி, கைதிகள் எண்ணிக்கை பதிவு செய்யப்படும். இனிமேல் பதிவு செய்யப்படும் கைதிகளின் விபரங்கள், சிறைத்துறை ஏ.டி.ஜி.பி., அலுவலகத்துக்கு, உடனுக்குடன் இ&-மெயில் மூலம் அனுப்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. வேலூர் சிறையில் உள்ள, சில அதிகாரிகள் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என தெரியவந்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Label