OUR CLIENTS
வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் பதவியை இழந்த மாஜி ஒன்றிய செயலாளர் கோரந்தாங்கல் குமார்! அன்று வன்னியன்- இன்று அந்நியன்!!!
வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் பதவியை இழந்த மாஜி ஒன்றிய செயலாளர் கோரந்தாங்கல் குமார்! அன்று வன்னியன்- இன்று அந்நியன்!!! Posted on 20-Dec-2017 வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் பதவியை  இழந்த மாஜி ஒன்றிய செயலாளர் கோரந்தாங்கல் குமார்! அன்று வன்னியன்- இன்று அந்நியன்!!!

வேலூர், டிச.20-
வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் பதவியை வகித்து வந்த மாஜி அதிமுக ஒன்றிய செயலாளர் கோரந்தாங்கல் குமாரிடம் இருந்து பறிக்கப்பட்டது. காரணம்,  அமைச்சர் வீரமணிக்கு எதிராகவும் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதால், வன்னியனாக இருந்தவர் அமைச்சர் வீரமணிக்கு இன்று அந்நியனாக தெரிந்தார்.

வேலூர் மாவட்டத்தில் காட்பாடி ஒன்றியம் மிகவும் செல்வச்செழிப்புடன் காணப்படுகிறது. இந்நிலையில் அதிமுக காட்பாடி ஒன்றிய செயலாளராக பதவி வகித்தவர் கோரந்தாங்கல் குமார். இவர் அதிமுகவுக்கு வருவதற்கு முன்னர் பால் வியாபாரம் செய்து வந்ததாக ரத்தத்தின் ரத்தங்களால் கதை கதையாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஒன்றிய செயலாளராக பதவி வகித்தார்.

அன்று முதல் அந்த பதவியை தக்க வைத்து கொள்ள தனது சாதியைச் சேர்ந்த அமைச்சராக உள்ள வீரமணியை பிடித்து கொண்டு விசுவாசி போல வலம் வந்தார். இதனால் வேலூர் அம்முண்டியில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலையில் தலைவராக பதவி வகித்தார். முதல் யூனிட்டை மட்டுமே இயக்கி பல கோடிகளுக்கு அதிபதியானார் இந்த கோரந்தாங்கல் குமார். பலரை முன்னேற விடாமல் முட்டுக்கட்டையாக இருந்தவர் இந்த கோரந்தாங்கல் குமார். இவரது கோரமான முகம் இன்று ரத்தத்தின் ரத்தங்களாலேயே கிழித்தெரியப்பட்டுள்ளது. கோரந்தாங்கல் குமார் தனக்கு வேண்டியவர்களை, அதாவது தான் சொல்வதை கேட்டு நடப்பவர்களை மட்டும் வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகக் குழுவில் உறுப்பினர்களாக சேர்த்து வைத்துக் கொண்டார். இப்படி நரித்தந்திரமாக செயல்பட்ட இவரை யாரும் அசைக்க முடியாமல் இருந்தார் என்றே சொல்லலாம். டிடிவி தினகரன் தனி அணி ஆரம்பித்ததும் கோரந்தாங்கல் குமார் அவரது அணிக்கு தாவினார். அத்துடன் அந்த அணியில் காட்பாடி ஒன்றிய செயலாளர் பதவி பெற்றுக் கொண்டார். 

இந்நிலையில் அன்று வன்னியனாக வலம் வந்த கோரந்தாங்கல் குமார் அதே அமைச்சர் வீரமணிக்கு விசுவாசமாக செயல்பட்டவர் எதிர்க்க தொடங்கினார். இதன் விளைவு நேற்று முன்தினம் நடந்த வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் சிறப்பு நிர்வாக குழு கூட்டத்தில் அவருடன் சேர்ந்து 4 பேர் மட்டுமே அவருக்கு வாக்களித்ததால் அவர் தலைவர் பதவியை இழந்தார். இன்று அந்நியனாக மாறிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. கோரந்தாங்கல் குமாருக்கு ஆதரவாக அவரும், அவருடன் சேர்ந்து கே.எம்.ரங்கநாதன், கே.பஞ்சநாதன், செம்பராயநல்லூர் பி.சேட்டு, எஸ். அருள்ராஜ் ஆகியோர் வாக்களித்தனர். கோரந்தாங்கல் குமாருக்கு எதிராக எம்.ஆனந்தன், கே.வி.ஆர்.ஜெயகோஷ், பெரியதகரகுப்பம் பி.சேட்டு, பி.கதிர்வேல், ஆர்.கே.நவீன்குமார், எஸ்.பொன்னம்பலம், கே.பழனி, வி.வசந்தி, டி.தமிழ்ச்செல்வி, எஸ்.சாந்தி, வி.புவனேஸ்வரி, ஆர்.கோட்டீஸ்வரி 
ஆகியோர் வாக்களித்துள்ளனர். இதன் வாயிலாக கோரந்தாங்கல் குமாரின் அரசியல் வாழ்க்கை அஸ்தமனமாகத் தொடங்கியுள்ளது என்றே கூறலாம். இனி இவரால் அரசியலில் பிரகாசிக்க முடியாது. 

கூட்டுறவு சர்க்கரை ஆலையில் வாரிக்குவித்த கோடிக்கணக்கான பணத்துக்கு எவ்வித கணக்கும் இல்லை. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்து குவித்து வைத்துள்ள கோரந்தாங்கல் குமார் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினால் பல கோடிகளை அள்ளலாம் என ரத்தத்தின் ரத்தங்கள் கூறுகின்றனர். அதிமுகவில் ஓரங்கட்டப்பட்டவர்கள் நிலை தற்போது எப்படி உள்ளது என்பது அனைவரும் நன்கு அறிந்ததே. கோரந்தாங்கல் குமார் எந்நிலைக்கு தள்ளப்படுவார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

Label