OUR CLIENTS
பீகார் ரயில் நிலையத்துக்கு தீ ரயில்களை இயக்க கூடாது, நக்சலைட்டுகள் அட்டூழியம்
பீகார் ரயில் நிலையத்துக்கு தீ ரயில்களை இயக்க கூடாது, நக்சலைட்டுகள் அட்டூழியம் Posted on 20-Dec-2017 பீகார் ரயில் நிலையத்துக்கு தீ  ரயில்களை இயக்க கூடாது,  நக்சலைட்டுகள் அட்டூழியம்

பீகார், டிச20-
பீகார் மாநிலத்தில் ரயில் நிலையத்துக்கு தீ வைத்த  நக்சலைட்டுகள் அங்கிருந்த  இருந்த 2 ஊழியர்களை கடத்தி சென்றனர். மேலும் தொடர்ந்து ரயில்களை இயக்க கூடாது என எச்சரிக்கை விடுத்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பீகார் மாநிலம் மசூதன் ரயில் நிலையத்தில் நேற்று இரவு நக்சலைட்டுகள் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் ரயில் நிலையத்தை தாக்கியதோடு, ரயில் சிக்னல் அறை மற்றும் கட்டுப்பாட்டு அறைக்கு தீ வைத்துள்ளனர். மேலும், அங்கிருந்த உதவி ஸ்டேஷன் மாஸ்டர் மற்றும் ஒரு ரயில்வே ஊழியர் ஆகிய இருவரையும் கடத்திச் சென்றுள்ளனர்.

இதனையடுத்து கடத்தப்பட்ட உதவி ஸ்டேஷன் மாஸ்டரிடம் இருந்து ரயில்வே நிலைய மேலாளர் ஒருவருக்கு போன் வந்தது. அவர், மசூதன் ரயில்தடம் வழியாக தொடர்ந்து ரயில்களை இயக்கினால் தங்கள் இருவரையும் கொன்று விடுவதாக நக்சலைட்டுகள் மிரட்டுகிறார்கள் என தெரிவித்தார்.  பின்னர் மசூதன் ரயில்தடத்தில் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. அங்கு வந்த பயணிகள் திரும்பிச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர். தொடர்ந்து இந்த தாக்குதல் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
‌        
     

Label