OUR CLIENTS
குஜராத் தேர்தலில் டெபாசிட் இழந்த சிவசேனா கட்சியின் 42 வேட்பாளர்கள்
குஜராத் தேர்தலில் டெபாசிட் இழந்த சிவசேனா கட்சியின் 42 வேட்பாளர்கள் Posted on 20-Dec-2017 குஜராத் தேர்தலில் டெபாசிட் இழந்த  சிவசேனா கட்சியின் 42 வேட்பாளர்கள்

குஜராத், டிச.20
சிவசேனா கட்சி சார்பில் குஜராத் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவரும் தங்கள் டெபாசிட்டை இழந்துள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.

 குஜராத் தேர்தலின் 2ம் கட்டமாக பெற்ற வாக்கு எண்ணிக்கை நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் 99 இடங்களை கைப்பற்றிய பாஜக அம்மாநிலத்தில் 6-வது முறையாக ஆட்சி அமைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளது. மறுபுறம் கடந்த தேர்தலை விட கூடுதல் இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் சாதனை படைத்துள்ளது. இந்த தேர்தலில் ஒவ்வொரு தொகுதியிலும் வேட்பாளர்கள் பெற்ற ஓட்டுக்களின் விபரங்கள் வெளியாகி உள்ளன.

பாஜகவின் கூட்டணி கட்சியான சிவசேனா இந்த தேர்தலில் 42 இடங்களில் போட்டியிட்டது. ஆனால் அக்கட்சியின் 42 வேட்பாளர்களில் ஒருவர் கூட வெற்றி பெறவில்லை. குறிப்பாக இவர்கள் அனைவரும் வேட்பு மனு தாக்கலின் போது டெபாசிட் செய்த தொகையையும் திரும்ப பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பொதுவாக தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவரும் பெற்ற ஓட்டுக்களில் 6-ல் ஒரு பகுதி ஓட்டை தோல்வி பெற்ற வேட்பாளர் பெற்றிருந்தால் அவரின் டெபாசிட் தொகை திரும்ப அளிக்கப்படும். ஆனால் இந்த தேர்தலில் டெபாசிட்டை திரும்ப பெறும் அளவுக்கு கூட சிவசேனாவினர் யாரும் வாக்குகள் பெறவில்லை. சிவசேனா கட்சியின் 42 வேட்பாளர்கள் பெற்ற மொத்த ஓட்டுக்களின் எண்ணிக்கை 33,893 ஆகும். 11 பேர் மட்டுமே இதில் 1000 ஓட்டுகளுக்கு மேல் பெற்றுள்ளனர். சாம்ராட் பாட்டில் பெற்ற 4,075 ஓட்டுக்களே இக்கட்சியின் வேட்பாளர் பெற்ற அதிகபட்ச ஓட்டாகும்.

இது குறித்து சிவசேனா, எங்களுக்கு 15 நாட்கள் மட்டுமே பிரச்சாரம் செய்ய அனுமதி கிடைத்தது. இது மிகவும் குறைந்த காலமாகும். ஒரு வேளை 2-3 மாதங்கள் காலம் கிடைத்திருந்தால் இதைவிட சிறப்பாக செயல்பட்டிருப்போம் என கருத்து தெரிவித்துள்ளது. 2007-ம் ஆண்டு குஜராத் தேர்தலில் இது போன்று சிவசேனா சார்பில் போட்டியிட்ட 33 வேட்பாளர்கள் தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.

Label