OUR CLIENTS
பனிமூட்டம் அதிகம் 12 வாகனங்கள் மோதி விபத்து
பனிமூட்டம் அதிகம் 12 வாகனங்கள் மோதி விபத்து Posted on 20-Dec-2017 பனிமூட்டம் அதிகம்  12 வாகனங்கள் மோதி விபத்து

ஆக்ரா, டிச.20
லக்னோவில் இருந்து ஆக்ரா செல்லும் நெடுஞ்சாலையில் இன்று கடும் பனி மூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனால் பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி பெரும் விபத்துக்குள்ளானது. "ஜோகிகோட் பகுதியில் உள்ள பங்கர்மாவ் காவல் நிலையம் அருகே  12க்கும் மேற்பட்ட வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானது. கடும் பனியின் காரணமாக சாலை சரியாக தெரியாததால் இந்த விபத்து ஏற்பட்டது.  என காவல்துறை கூடுதல் எஸ்.பி அம்பரீஷ் படவ்ரியா தெரிவித்தார். இந்த விபத்தில் யாருக்கும் பெரிய காயங்கள் ஏற்பட வில்லை. மேலும்  காயமடைந்தவர்களுக்கு அருகே உள்ள சமூக நலக் கூடத்தில் வைத்து சிகிச்சை அளித்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். முன்னதாக கடந்த மாதம், புகைமூட்டம் காரணமாக, ஆக்ரா சாலையில் பல வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Label