OUR CLIENTS
பா.ஜனதா வெற்றி பெற்ற12 தொகுதிகளின் முடிவை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு- ஹர்த்திக் பட்டேல் பேட்டி
பா.ஜனதா வெற்றி பெற்ற12 தொகுதிகளின் முடிவை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு- ஹர்த்திக் பட்டேல் பேட்டி Posted on 20-Dec-2017 பா.ஜனதா வெற்றி பெற்ற12 தொகுதிகளின்  முடிவை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு- ஹர்த்திக் பட்டேல் பேட்டி

புதுடெல்லி. டிச.20
குஜராத் சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா வெற்றி பெற்ற 12 தொகுதிகளின் முடிவை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடர போவதாக என்று பட்டேல் சமூக தலைவர் ஹர்திக் பட்டேல் தெரிவித்துள்ளார்.

குஜராத் சட்டசபை தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவாக முக்கிய பங்கு வகித்தவர் ஹர்த்திக் பட்டேல் இடஒதுக்கீடு போராட்டத்தால் குஜராத் மாநிலத்தில் ஆளும் பா.ஜனதாவுக்கு கடும் நெருக்கடி கொடுத்தார். சட்டசபை தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவாக சூரத், ராஜ்கோட் பகுதியில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். அவரது பிரசாரம் காங்கிரசுக்கு கை கொடுத்தது. இந்த பகுதிகளில் கூடுதல் தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஓட்டுப்பதிவு எந்திரங்களில் முறைகேடு வாய்ப்பு இருப்பதாக குற்றம் சாட்டினார். தேர்தல் முடிவுகள் வெளியான பின்பு ஆமதாபாத்தில் தனது வீட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- 

குஜராத்தில் காங்கிரசின் வெற்றிக்காக நான் முக்கிய பங்காற்றினேன். இதனால் காங்கிரசின் செல்வாக்கு அதிகரித்தது. என்னால் தான் காங்கிரஸ் வெற்றிபெற்றது. காங்கிரசின் ஓட்டு 33 சதவீதத்தில் இருந்து 43 சதவீதமாக அதிகரித்துள்ளது. நான் ஆதரித்ததால் தான் காங்கிரஸ் வேட்பாளர்கள் பலர் வெற்றிபெற்றனர். 12 தொகுதிகளில் முறைகேடு செய்து பா.ஜனதா வெற்றிபெற்றுள்ளது. இந்த தொகுதிகளில் மந்திரிகள் முறைகேடு செய்து இருக்கிறார்கள். உண்மையில் பா.ஜனதா 82 தொகுதிகளில்தான் வெற்றி பெற்றது. பா.ஜனதாவை படேல்கள் எதிர்க்கிறார்கள், தலித்துகள், வியாபாரிகள், பிற்படுத்தப்பட்டோர் என அனைவரும் எதிர்க்கும் போது யார் அவர்களுக்கு வாக்களித்திருப்பார்கள். இந்நிலையில் 12 தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெற்றதாக தேர்தல் கமி‌ஷன் அறிவித்துள்ளது தவறு. இதை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தொடருவேன். இவ்வாறு அவர் கூறினார்.

Label