OUR CLIENTS
ராஜஸ்தான் உள்ளாட்சி இடைத்தேர்தலில் காங்கிரஸ் மாபெரும் வெற்றி
ராஜஸ்தான் உள்ளாட்சி இடைத்தேர்தலில் காங்கிரஸ் மாபெரும் வெற்றி Posted on 20-Dec-2017 ராஜஸ்தான் உள்ளாட்சி இடைத்தேர்தலில் காங்கிரஸ் மாபெரும் வெற்றி

டெல்லி, டிச.20
ராஜஸ்தானில் கடந்த 17-ம் தேதி நடைபெற்ற உள்ளாட்சி இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளது. இதில், காங்கிரஸுக்கு பெரும் வெற்றி கிடைத்துள்ளது.

ராஜஸ்தானில் பாஜக தலைமையிலான ஆட்சியில் வசுந்தரா ராஜே முதல் அமைச்சராக உள்ளார்.  இந்நிலையில் இங்கு நடைபெற்ற உள்ளாட்சி இடைத்தேர்தலில் ஊராட்சி தலைவர் பரிஷத்தின் 4 பதவிகளிலும் காங்கிரஸுக்கு வெற்றி கிடைத்துள்ளது. 27 பஞ்சாயத்து சமிதிகளில் 16 இடங்கள் காங்கிரஸ் கைவசம் வந்துள்ளன. 6 முனிசிபல் நகராட்சிகளையும் காங்கிரஸ் கைப்பற்றி உள்ளது. முதல்வர் வசுந்தரா மற்றும் அவரது மகனான மக்களவை பாஜக எம்பி துஷ்யந்த் சிங் ஆகியோரது தொகுதிகள் அமைந்துள்ள பாரான் மாவட்டத்திலும் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இங்குள்ள இரு முனிசிபல் நகராட்சிகளையும் பாஜகவிடம் இருந்து காங்கிரஸ் பறித்துள்ளது.
‌ 

Label