OUR CLIENTS
ஆர்.கே. நகர் தேர்தல் நேரத்தில் ஜெயலலிதா வீடியோ வெளியானது அப்பட்டமான விதிமீறல்-தமிழிசை கருத்து
ஆர்.கே. நகர் தேர்தல் நேரத்தில் ஜெயலலிதா வீடியோ வெளியானது அப்பட்டமான விதிமீறல்-தமிழிசை கருத்து Posted on 20-Dec-2017 ஆர்.கே. நகர் தேர்தல் நேரத்தில் ஜெயலலிதா வீடியோ வெளியானது அப்பட்டமான விதிமீறல்-தமிழிசை கருத்து

சென்னை, டிச.20
தேர்தல் நேரத்தில் ஜெயலலிதா வீடியோ வெளியானது அப்பட்டமான விதிமீறல் என்று பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற வீடியோ பதிவை தினகரன் தரப்பை சேர்ந்த வெற்றிவேல் இன்று வெளியிட்டார்.
இதுபற்றி பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:-
ஒரு மருத்துவர் என்ற முறையிலும், அரசியல் கட்சி தலைவர் என்ற முறையிலும், சாதாரண பெண் என்ற முறையிலும் சில கேள்விகளும், சந்தேகங்களும் எழுகின்றன.
ஜெயலலிதா ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்படும் போது சுயநினைவின்றி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்ததாக பிரதாப் ரெட்டி கூறினார்.
அப்படியானால் எவ்வளவு நாள் சிகிச்சைக்கு பிறகு இந்த அளவுக்கு உடல் நிலை தேறினார். அதன் பிறகு இறக்கும் நிலைக்கு எப்படி சென்றார்? நோய் விபரம், அதற்கான சிகிச்சை விவரம் பற்றி அப்பல்லோ நிர்வாகம் ஏன் விளக்கம் தரவில்லை.

மருத்துவமனை தரப்பில் வீடியோ எடுக்கப்படவில்லை என்று கூறுகிறார்கள். தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பவர்களை பார்க்கவும், படம் எடுக்கவும் மருத்துவமனையில் ஒப்புதல் பெற வேண்டும். அந்த நடைமுறை பின் பற்றப்பட்டதா? இல்லை என்றால் ஒரு நோயாளியை நேரில் வீடியோ எடுக்கும் அளவுக்கு ஆஸ்பத்திரி நிர்வாகம் கவனக்குறைவாக இருந்ததா? ஜெயலலிதா சாதாரண பெண்மணி அல்ல. முதல்-அமைச்சர் அவருக்கு சிகிச்சை அளித்ததில் அதை வெளியே சொல்வதில் ஏன் இந்த குழப்பம்? அவதூறான குற்றச்சாட்டு ஆரம்பத்திலேயே எழத்தான் செய்தது. அப்போதே வீடியோ பதிவை வெளியிடாதது ஏன்?

தற்போது விசாரணை கமி‌ஷன் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் தன்னிடம் இருக்கும் அனைத்து ஆதாரங்களையும் விசாரணை கமி‌ஷனிடம் கூறி இருக்க வேண்டும். நாளை ஆர்.கே.நகர் தேர்தல் நடைபெற உள்ள சூழலில் வெளியிட்டுள்ளார்கள். ஆக வீடியோவை மறைத்ததிலும் வெளியிட்டதிலும் உள்நோக்கம் இருக்கிறது.
ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டபோது நாட்டில் ஒரு கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்து இருந்தது. எனவே அவரது படத்தை வெளியிடவே தேர்தல் ஆணையம் தடை விதித்து இருந்தது. அந்த வகையில் நாளை தேர்தல் நடைபெறும் சூழ்நிலையில் இன்று வீடியோ வெளியிட்டு இருப்பது அப்பட்டமான விதிமீறல். இதில் இனி எதுவும் செய்ய முடியாது என்று தேர்தல் ஆணையம் ஒதுங்க முடியாது. வாக்குப் பதிவு தொடங்க இன்னும் 24 மணி நேரம் இருக்கிறது.

முக்கியமாக வீடியோவின் நம்பகத்தன்மை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியது. ஏனெனில் ஜெயலலிதாவின் கால்களுக்கும், கைகளுக்கும் பிசியோதெரபி கொடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் வீடியோவில் கால், கைகள் ஆரோக்கியமாகவே தெரிகின்றன. வீடியோ எடுக்கப்பட் டுள்ள இடத்தில் தேவையான, முக்கியமான மருத்துவ உபகரணங்கள் இருப்பதாக தெரியவில்லை. ஒன்றுமட்டும் தெரிகிறது. ஜெயலலிதாவை இறக்கும் போதும் நிம்மமதியாக சாக விடவில்லை. அவரது மனம் சாந்தியடையவில்லை என்பது இதயத்தை உறுத்துகிறது. 
இவ்வாறு அவர் கூறினார்.

     

Label