OUR CLIENTS
இன்றைய சவால்களை கையாளும் திறன் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு இல்லை இந்தியா அறிவிப்பு
இன்றைய சவால்களை கையாளும் திறன் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு இல்லை இந்தியா அறிவிப்பு Posted on 22-Dec-2017 இன்றைய சவால்களை கையாளும் திறன் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு இல்லை இந்தியா அறிவிப்பு

நியூயார்க், டிச. 22-
ஐக்கிய நாடுகள் பாது காப்பு கவுன்சிலுக்கு தற்போதைய பிரச்சனை களைக் கையாளும் திறன் இல்லை.

எனவே 15 உறுப்பினர்கள் கொண்ட கவுன்சிலை சீரமைத்து விரிவுபடுத்த வேண்டும் என ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி சையத் அக்பருதின் நேற்று தெரிவித்தார். சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்குக்கு சிக்கலான சமகால சவால்களைச் சந்திப்பது தொடர்பாக ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் சிறப்பு கூட்டத்தில் விவாதம் நடைபெற்றது.  

அதில் இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி சையத் அக்பருதின் கலந்துகொண்டு பேசினார். அதன் விவரம்
உலக நாடுகள் மத்தியில் அதிகாரத்தை சமநிலையுடன் பராமரிக்க 70 ஆண்டுகளுக்கு முன்பு ஐநா பாதுகாப்பு கவுன்சில் உருவாக்கப்பட்டது. ஆனால் இன்றைய காலக்கட்டத்தின் மாற்றங்களைச் சமாளிக்கும் திறன் ஐநா பாதுகாப்பு கவுன்சிலிடம் இல்லை. சட்டப்பூர்வமாக கருதப்படாத ஐநா கவுன்சில் அதன் நம்பகத்தன்மையை இழந்து விட்டது.

இனி அதனால் நமக்கு தீர்வு கிடைக்கும் என நம்ப முடியாது. இன்றையச் சவால்களைச் சந்திக்க வேண்டும் என்றால் பழைய விதிமுறைகளைக் கடந்து புதிய நடைமுறைகளைச் செயல்படுத்த வேண்டும். அதுவரை இது போன்ற விவாதங்கள் அமைதியாக வாழ விரும்பும் மக்கள் மீது சிறு தாக்கத்தை மட்டுமே ஏற்படுத்தும் என சையத் அக்பருதீன் கூறினார்.

ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் 125 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியா நிரந்தர உறுப்பினராக முயற்சி செய்து வருகிறது. இதற்கு கவுன்சிலின் ஐந்து நிரந்தர உறுப்பினர்களில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ரஷ்யா ஆதரவாக உள்ளது. ஆனால் சீனா இதை எதிர்க்கிறது. மேலும் ஐநா பாதுகாப்பு கவுன்சிலைச் சீரமைக்கும் பணிகள் நத்தை வேகத்தில் நடைபெறுவதால் சர்வதேச சமூகத்தினர் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Label