OUR CLIENTS
இந்தியாவில் 2022ம் ஆண்டுக்குள் 100 ஜிகா வாட்ஸ் சூரிய மின்சார உற்பத்தி மின்சார அமைச்சர் உறுதி
இந்தியாவில் 2022ம் ஆண்டுக்குள் 100 ஜிகா வாட்ஸ் சூரிய மின்சார உற்பத்தி மின்சார அமைச்சர் உறுதி Posted on 22-Dec-2017 இந்தியாவில் 2022ம் ஆண்டுக்குள் 100 ஜிகா வாட்ஸ் சூரிய மின்சார உற்பத்தி மின்சார அமைச்சர் உறுதி

புதுடெல்லி, டிச. 22-
மத்திய மின்சார அமைச்சர் ஆர்.கே .சிங் வரும் 2022ம் ஆண்டுக்குள் இந்தியாவில் 100 ஜிகா வாட்ஸ் சூரிய மின்சக்தி உற்பத்தி செய்ய மத்திய அரசு உறுதியாக உள்ளது என மாநிலங்களவையில் அறிவித்தார்.  

குளிர்கால கூட்டத் தொடரின் 4ம் நாளான நேற்று மக்களைவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய மின்சார துறை அமைச்சர் ஆர்.கே .சிங் மத்திய அரசின் இலக்கான 100 ஜிகா வாட்ஸ் சூரிய மின்சக்தி திட்டம் நிச்சயம் நிறைவேறும் என கூறினார்.

‘‘இந்த ஆண்டு டிசம்பர் 15ம் தேதி வரை இந்தியாவில் 16,676 மெகா வாட்ஸ் சூரிய மின்சக்தி உற்பத்தி செய்ய சோலார் பேனல்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 6,500 மெகா வாட்ஸ் உற்பத்திக்கான சோலார் பேனல்கள் அமைப்பட்டு வருகின்றன’’

மத்திய அரசின் திட்டப்படி இந்தியாவின் சூரிய மின்சக்தி உற்பத்தி 2017-18ம் ஆண்டில் 20,000 மெகாவாட்ஸ், 2018-19ல் 30,000 மெகாவாட்ஸ் மற்றும் 2019-20ம் வருடத்தில் 30,000 மெகா வாட்ஸ் என்ற கணக்கில் உயர்த்தப்படும்.
அதன்படி வரும் 2022ம் ஆண்டு மத்திய அரசின் திட்டத்தின் கீழ் 100 ஜிகாவாட்ஸ் சூரிய மின்சக்தி உற்பத்தி செய்யப்படும் என்று அரசு நம்பிக்கை கொண்டுள்ளது என ஆர்.கே .சிங் கூறினார்.

மேலும் தற்போது சோலார் செல்கள் மற்றும் மோடூல்ஸ்களை இந்தியாவில் தயாரிக்க வசதி இல்லாததால் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு அதன் மூலம் திட்டம் நிறைவேற்றப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் ஆர்.கே சிங் மக்களவையில் தெரிவித்தார்.

Label