OUR CLIENTS
வருமான வரி மதிப்பீட்டில் அடுத்த ஆண்டு முதல் புதிய முறை?: திட்டம் வகுக்க சிறப்பு குழு அமைப்பு
வருமான வரி மதிப்பீட்டில் அடுத்த ஆண்டு முதல் புதிய முறை?: திட்டம் வகுக்க சிறப்பு குழு அமைப்பு Posted on 22-Dec-2017 வருமான வரி மதிப்பீட்டில் அடுத்த ஆண்டு முதல் புதிய முறை?: திட்டம் வகுக்க சிறப்பு குழு அமைப்பு

புதுடெல்லி, டிச. 22-
அடுத்த ஆண்டு முதல் வருமான வரி மதிப்பீட்டில் புதிய முறை அமலுக்கு வரலாம். இது தொடர்பான திட்டம் வகுக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

‘ராஜேஸ்வா கியான் சங்கம்’ என்ற தலை ப்பில் வருமான வரி அதிகாரிகளின் 2 நாள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில், வருமான வரி மதிப்பீட்டுப் பணியினை மின்னணு முறையில் (கம்ப்யூட்டர் முறையில்) செய்வதற்கு முக்கியத்துவம் அளிக்க மத்திய அரசு விரும்புகிறது என்ற தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசும்போது, வருமான வரி செலுத்துவோரிடம் நம்பிக்கையை ஏற்படுத்தும் விதத்தில், ஊழலை அடியோடு ஒழிக்கிற சூழலை வருமான வரித்துறை உருவாக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். அதைத் தொடர்ந்து வருமான வரித்துறை தொடர்பான அனைத்து செயல்பாடுகளும் இணையதள வழியில்தான் நடைபெறவேண்டும் என்ற நிலை வரப்போகிறது என தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், அடுத்த ஆண்டு முதல் வருமான வரி மதிப்பீட்டில் முகமற்ற, பெயரற்ற மின்னணு முறையை செயல்படுத்துவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அந்த வகையில், வருமான வரித்துறையின் கொள்கை வகுக்கும் அமைப்பான சி.பி.டி.டி. என்னும் மத்திய நேரடி வரிகள் வாரியம் 9 உறுப்பினர்களைக் கொண்ட உயர் மட்டக்குழு ஒன்றை அமைத்துள்ளது.

இந்த குழுவுக்கு முதன்மை தலைமை கமிஷனர் அந்தஸ்தில் உள்ள அதிகாரி தலைமை தாங்குவார். இந்த குழு, முகமற்ற, பெயரற்ற மின்னணு முறையை அமல்படுத்துவதற்கு திட்டம் வகுத்து அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 28-ந் தேதிக்குள் அறிக்கை அளிக்குமாறு கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நேற்று முன்தினம் மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள உத்தரவில், முகமற்ற, பெயரற்ற மின்னணு மதிப்பீட்டு முறையை உருவாக்க வேண்டும் என்ற வருமான வரித்துறையின் திட்டத்தை தொடங்குவதற்காக குழு அமைக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இதுபற்றி மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “உயர் மட்டக்குழு தனது அறிக்கையை அடுத்த ஆண்டு பிப்ரவரி 28-ந் தேதிக்குள் அளிக்க வேண்டும் என்று கூறி இருப்பது, புத்தாண்டின் முதல் பாதி பருவத்தில் புதிய வரி மதிப்பீட்டு முறையை அமல்படுத்த வேண்டும் என்று எண்ணி இருப்பதற்கான அறிகுறிதான்” என்று குறிப்பிட்டார்.

ஏற்கனவே சில பெரிய நகரங்களில் இந்த முறையை சோதனை ரீதியில் மத்திய நேரடி வரிகள் வாரியம் கடந்த சில ஆண்டுகளாக அமல்படுத்தி உள்ளது. வருமான வரி செலுத்துகிறவர்கள், வருமான வரி அலுவலகத்துக்கு வருவதை குறைக்கவும், வரி அதிகாரிகளுடன் தொடர்பு ஏற்படுத்துவதை குறைக்கவும் அதன்மூலம் ஊழலை கட்டுப்படுத்தவும் இந்த முறை சோதனை ரீதியில் அமல்படுத்தப்பட்டுள்ளது. 

Label