OUR CLIENTS
3 பாகிஸ்தானியர்களுக்கு மருத்துவ விசா சுஷ்மா ஸ்வராஜ் அறிவிப்பு
3 பாகிஸ்தானியர்களுக்கு மருத்துவ விசா சுஷ்மா ஸ்வராஜ் அறிவிப்பு Posted on 22-Dec-2017 3 பாகிஸ்தானியர்களுக்கு மருத்துவ விசா சுஷ்மா ஸ்வராஜ் அறிவிப்பு

புதுடெல்லி, டிச. 22-
பாகிஸ்தானை சேர்ந்த 3 பேருக்கு மருத்துவ விசா வழங்கப்படுவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸுவராஜ் நேற்று அறிவித்துள்ளார்.

இந்திய வெளியுறவு த்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மருத்துவ விசா வேண்டி டுவிட்டரில் தன்னைத் தொடர்பு கொள்பவர்களுக்கு உடனடியாக விசா வழங்க உத்தரவிட்டு வருகிறார். பல பாகிஸ்தானியர்களுக்கு இம்முறையில் விசா வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

”பாகிஸ்தானைச் சேர்ந்த ஃபாதிமா நயீம் (வயது 13), மன்சூர் 
பகானி மற்றும் ஷெஹாப் ஆசிஃப் 
ஆகிய 3 பேருக்கும் இந்தியாவில் சிகிச்சைப்பெற மருத்துவ விசா வழங்கப்படவுள்ளது” என வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸுவராஜ் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

ஷெஹாப் ஆசிபிற்கு, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டியுள்ளது. அவர் சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெறவுள்ளார்.

எல்லைப் பிரச்சனை மற்றும் பயங்கரவாத தாக்குதல்களால் இந்திய பாகிஸ்தான் உறவில் பெரிய விரிசல் ஏற்பட்டுள்ளது. ஆனால் பாகிஸ்தானியர்களுக்கு சுஷ்மா ஸ்வராஜ் தொடர்ந்து உதவி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Label