OUR CLIENTS
2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கு ஆ.ராசா-, கனிமொழி உள்பட அனைவரும் விடுதலை
2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கு ஆ.ராசா-, கனிமொழி உள்பட அனைவரும் விடுதலை Posted on 22-Dec-2017 2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கு ஆ.ராசா-, கனிமொழி உள்பட அனைவரும் விடுதலை

புதுடெல்லி, டிச. 22-
2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கிலிருந்து முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா, கனிமொழி எம்.பி. உள்பட 14 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். சிபிஐ சிறப்பு நீதிபதி ஓ.பி. சைனி டில்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் நேற்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பை வெளியிட்டார்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் தி.மு.க அங்கம் வகித்தபோது, மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக ஆ. ராசா இருந்தார் . அப்போது, மொபைல் போன் சேவைகளுக்கான 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்வதில் முறைகேடு நடந்ததாக, மத்திய கணக்குத் தணிக்கை அதிகாரி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இந்த ஒதுக்கீட்டினால், அரசுக்கு 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டது. இதுகுறித்து சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரித்தது. இந்த வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கருணாநிதியின் மகளும் மாநிலங்களவை  உறுப்பினருமான கனிமொழி ஆகியோர்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

2ஜி வழக்கு தொடர்பான வாதங்கள் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முடிவடைந்தது. நாட்டையே உலுக்கிய இவ்வழக்கு இறுதிக்கட்டத்தை நெருங்கியது. 6 ஆண்டுகளாக விசாரிக்கப்பட்டுவந்த இவ்வழக்கின் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது.

2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் டில்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, தி.மு.க மாநிலங்களவை எம்.பி கனிமொழி உள்ளிட்டோர் டில்லி பாட்டியாலா நீதிமன்றம் வந்தனர். சுப்பிரமணியன் சுவாமியும் நீதிமன்றம் வந்தார். பாட்டியாலா நீதிமன்ற வளாகம் பரபரப்பாக காணப்பட்டது. நீதிமன்ற வளாகத்தில் தி.மு.க தொண்டர்களும் குவிந்தனர். காலை 10.30 மணியளவில் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. 

6 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கபட்டது. 2 ஜி அலைக்கற்றை முறை கேடு வழக்கில் இருந்து ஆ.ராசா- கனிமொழி உள்பட 14 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். 2ஜி வழக்கில் அமலாக்கத்துறை பறிமுதல் செய்த ரூ. 223.55 கோடி சொத்துகளை விடுவிக்கவும் டெல்லி சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது.
ராகுல் வாழ்த்து
தீர்ப்பு வெளியானதும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொலைபேசியில் கனிமொழியுடன் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்தார்.

மேல்முறையீடு உறுதி
தீர்ப்பு வெளியான வியாழன் அன்று மதியமே தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக சிபிஐயும், அமலாக்கப்பிரிவும் திட்டவட்டமாக அறிவித்துள்ளன.

Label