OUR CLIENTS
கடலுக்கு அடியில் இயங்கும் புல்லட் ரயில்
கடலுக்கு அடியில் இயங்கும் புல்லட் ரயில் Posted on 22-Dec-2017 கடலுக்கு அடியில் இயங்கும் புல்லட் ரயில்

மும்பை, டிச. 22-
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து,  மும்பைக்கு  முதல் புல்லட் ரயில் பயணம் துவக்கப்படுகிறது. இதற்கான  அடிக்கல் நாட்டும் விழா, கடந்த செப்டம்பர் மாதம் நடந்தது

ஜப்பான் பிரதமர் ஷின்சு அபே, பிரதமர் நரேந்திர மோடி  ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதன் மதிப்பீடு ரூ. 1.10 லட்சம் கோடி.  இதற்கு, 88 ஆயிரம் கோடி ரூபாயை, 0.1 சதவீத வட்டியுடன் வழங்க ஜப்பான் முன்வந்துள்ளது. அகமதாபாத், மும்பை இடையே, 508 கி.மீ., தூரத்துக்கு  இந்த புல்லட் ரயில் இயக்கப்படுகிறது. , அதிகபட்சமாக  மணிக்கு, 320 கி.மீ., வேகத்தில் செல்லும்.

12 ரயில்நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. மொத்த வழித் தடத்தில், 92 சதவீத தூரம், மேம்பாலத்தில் புல்லட் ரயில் பயணிக்கும்.6 சதவீதம் தூரம், சுரங்கப்பாதையாக இருக்கும். 2 சதவீதம் அதாவது  21 கி.மீ., தூரம் சுரங்கப்பாதையில், தானே கடற்கரை அருகே  7 கி.மீ., தூரம், கடலுக்கு அடியில் அமைகிறது.
இந்தியாவில் முதன்முறையாக கடலுக்கு அடியில் இந்த புல்லட் ரயில் செல்லும்போது அது பயணிகளுக்கு சாதனை அனுபவமாக இருக்கும். இது பற்றி தேசிய அதி வேக ரயில் கார்ப்போரேஷன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அச்சல் காரே கூறியதாவது: கடலுக்கு அடியில் இருக்கும். 7கி.மீ.  கடந்து செல்லும் சுரங்கப் பாதைக்கு தேவையான  தானே கடற்கரை பகுதியில் ஏறத்தாழ 66 ஆழமான சிறுதுளைகள் ஒவ்வொன்றும் 250 இடைவெளி விட்டு தோண்டப்பட்டு வருகிறது.

இதற்கான தொழில்நுட்பம் மற்றும் சிறப்பு கருவிகள் ஜப்பான் நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்டு உள்ளது. உயரமான அலைகள் இருக்கும் போதுதான் இதற்கான பணிகள் செய்ய முடியும். ஏனென்றால் தரை மிக கொந்தளிப்பாக இருக்கும். எனவே 4 முதல் 5 மணி நேரம்தான் வேலை நேரம் இருக்கும். இதற்காக ஜப்பான் நமக்கு பயிற்சி அளிக்கும். கடலுக்கடியில் சுரங்கப்பாதை அமைப்பது ஒன்றும் எளிதல்ல. மிகவும் கஷ்டமான காரியம்.

கடலுக்கு அடியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி அடுத்த ஆண்டு தொடங்கும். 2022ம் ஆண்டு கடைசிக்குள் இதற்கான பணிகள் முற்றிலும் முடிவடைந்து விடும். இவ்வாறு அவர் கூறினார்.

Label