OUR CLIENTS
எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வக்கீல் தொழில் செய்ய தடை
எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வக்கீல் தொழில் செய்ய தடை Posted on 22-Dec-2017 எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வக்கீல் தொழில் செய்ய தடை

புதுடெல்லி, டிச. 22-
எம்.பி., எம்.எல்.ஏ.க்களாக இருப்பவர்கள் வக்கீலாக தொழில் செய்ய தடை விதிக்கவேண்டும் என்று இந்திய பார் கவுன்சிலுக்கு டெல்லி வழக்கறிஞரும் பா.ஜ. முன்னணி தலைவருமான அஸ்வினி குமார் உபாத்யாயா கோரிக்கை விடுத்துள்ளார். நீதிபதிகள் மற்றும் நீதித்துறை அலுவலர்களை விட எம்.பி., எம்.எல்..ஏ.க்களுக்கு நல்லசம்பளம், அலவன்ஸ், ஓய்வுகால சலுகைகள் என பலவற்றை அனுபவிக் கின்றனர்.

மக்கள் பிரநிதிகள்  கோர்ட்டுகளில்வக்கீலாக தொழில் செய்ய அனுமதிப்பது அரசியல் சட்டத்தின் பிரிவு 14 மற்றும் 15க்கு எதிரானது ஆகும். பார்லி மற்றும் சட்டசபைகளில் முக்கிய மான விவாதங்கள் நடக்கும் போது அவர்கள் கோர்ட்டுகளில் வழக்குகளில் ஆஜராவ தன்மூலம் மக்கள் பிரதிநிதிகள் கடமையில் இருந்தும் 
தவற நேரிடுகிறது. எனவே மற்ற பணிகளில்  உள்ளவர்கள் வக்கீலாக கோர்ட்டுகளில் வாதாடக்கூடாது என்று சுப்ரீம்கோர்ட் ஏற்கனவே தீர்ப்பளித் துள்ளது என்றும் அவர்சுட்டிக்காட்டி உள்ளார்.

Label