OUR CLIENTS
பாஜக-&திமுக கூட்டணிக்கு இனி தடை இல்லை!
பாஜக-&திமுக கூட்டணிக்கு இனி தடை இல்லை! Posted on 22-Dec-2017 பாஜக-&திமுக கூட்டணிக்கு இனி தடை இல்லை!

சென்னை, டிச. 22-
2ஜி வழக்கில் வெளியாகியுள்ள தீர்ப்பு காரணமாக, தமிழகத்தில் கூட்டணிகள் மாறும் வாய்ப்புள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2ஜி வழக்கில் திமுகவை சேர்ந்த கனிமொழியும், ஆ.ராசாவும் மட்டுமின்றி குற்றச்சாட்டுக்கு ஆளான அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதனால் திமுக மீதான ஊழல் கறை துடைக்கப்பட்டுவிட்டது.

இனிமேல் பாஜக-திமுக கூட்டணிக்கு தடை இல்லை என்கிறார்கள். தேவைப்பட்டால் இந்த கூட்டணி அமைய வாய்ப்புள்ளதாக டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன.

தமிழகத்தில் ஆளும் அதிமுக அரசு மீது மக்களுக்கு அதிருப்தி அதிகரித்துக்கொண்டே செல்கிறது. எனவே அவர்களுடன் கூட்டணி வைக்க அச்சம் பாஜகவுக்கு உள்ளது.

Label