OUR CLIENTS
கேரள டி.ஜி.பி. சஸ்பெண்ட்
கேரள டி.ஜி.பி. சஸ்பெண்ட் Posted on 22-Dec-2017 கேரள டி.ஜி.பி. சஸ்பெண்ட்

திருவனந்தபுரம், டிச. 22-
கேரள போலீஸ் டி.ஜி.பி. ஜேக்கப் தாமஸ், ஒகி புயலின் போது சட்டம் ஒழுங்கு  மோசமாகி விட்டது. புயலில் எத்தனை பேர் இறந்தார்கள்.

எத்தனை போர் மாயமானார்கள் என்பது தெளிவாக தெரியவில்லை. இதற்கு யார் பொறுப்பு ஏற்றுக்கொள்வது. பணக்கார வீட்டு பிள்ளைக் கடலில் காணாமல் போய் இருந்தால் நிலைமையே வேறு. பணக்காரர்களிடம் ஒற்றுமை உள்ளது. அதிகாரம் இருக்கிறது. ஊழலை எதிர்த்துப் பேசவே மக்கள் பயப்படுகிறார்கள் என்று  கூறியிருந்தார். அரசுக்கு எதிராக அவர் கருத்து வெளியிட்டதைத் தொடர்ந்து அவரை சஸ்பெண்ட் செய்து தலைமைச் செயலாளர்  உத்தரவு பிறப்பித்துள்ளார். துறை சார் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Label