2ஜி வழக்கு மேல்முறையீடு செய்ய வேண்டும் Posted on 22-Dec-2017
சென்னை, டிச. 22-
2ஜி ஒதுக்கீட்டு வழக்கில் சிபிஐ மேல் முறையீடு செய்ய வேண்டும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
திமுக 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஊழல் செய்ததாக நடந்திருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது. குறிப்பாக, அலைக்கற்றை ஒதுக்கீட்டில் 1 லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக கூறப்பட்டது.
டெல்லி, சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 6 வருடங்களாக இந்த வழக்கு நடைபெற்று வந்தது. இந்த நிலையில், 2ஜி ஒதுகீடு வழக்கின் தீர்ப்பில் குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். இந்நிலையில், தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
திமுக மீதான 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் வழக்கு தீர்ப்பு நேற்று அறிவிக்கப்பட்டது. இதில், 2ஜி வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஆனால், சிபிஐ இந்த வழக்கில் மேல் முறையீடு செய்ய வெண்டும். ஏனெனில், 2ஜி ஒதுக்கப்படும் போது, ஒரு தலைப்பட்சமாக, தன்னிச்சையாக, நியாமற்ற கொள்ளை முடிவுகளை திமுக எடுத்ததாக நீதிமன்றம் கடந்த 2012ம் ஆண்டு குறிப்பிட்டுள்ளது. அதனுடன், இந்திய அரசியலமைப்புக்கு எதிராக 2ஜி கொள்கை முடிவு எடுக்கப்பட்டதாக உள்ளது. ஆதலால், டெல்லி உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் ஆகியவற்றில் சிபிஐ மேல் முறையீடு செய்ய வேண்டும் என்றார்.